ஊக்கத் தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சென்னை, செப். 9 சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோயிலில்  ஊக்கத் தொகையுடன் அர்ச்சகர் பயிற்சி பெற விண்ணப்பிக்கலாம்.

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி சாமி கோயில் சார்பில் நடத்தப்படும் அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் நிகழ் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஓராண்டு பயிற்சி முடித்த பிறகு வைணவ அர்ச்சகர் சான்றிதழ் வழங்கப்படும்.

இதற்கான கல்வித் தகுதி 8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் சேருவதற்கு குறைந்தபட்சம் 14 வயதிலிருந்து 24 வயது வரை இருக்க வேண்டும். மேலும் இந்து மதத்தைப் பின்பற்றுபவர் யாரும் விண்ணப்பிக்கலாம்.

விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவத்தை parthasarathy.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து விண்ணப்பிக்கலாம்.

பயிற்சிப் பள்ளியில் சேரும் ஒவ்வொரு மாணவருக்கும் மாதந்தோறும் முழு நேர பயிற்சிக்கு ரூ.10,000 ஊக்கத் தொகை வழங்கப்படும்.

மேலும் தங்குமிடம், உணவு, உடை, பாடப்புத்தகங்கள் கோயில் மூலம் வழங்கப்படு கிறது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ‘துணை ஆணையர், செயல் அலுவலர், அருள்மிகு பார்த்தசாரதிசாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை 600 005′ என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டுமென கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *