புதுடில்லி, மே 30 – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ட்விட்டரில் நேற்று (29.5.2029) வெளியிட்ட பதிவு மற்றும் காட்சிப்பதிவில் கூறியிருப்பதாவது: பாஜகவின் 9 ஆண்டு கால ஆட்சியில் பணவீக்கம் வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.
ஜிஎஸ்டி வரிவிதிப்பால் ஏழை, நடுத்தர குடும்பங்களின் பட்ஜெட் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2014ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது சமையல் எரிவாயு, பெட்ரோல்-டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலை கணிசமாக உயர்ந்திருக்கிறது.
இந்த அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாத நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டு உள்ளனர். மக்களின் பிரச்சினைகளை தீர்க்க கடந்த 9 ஆண்டுகளில் பா.ஜ.க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இவ்வாறு கார்கே தெரிவித்துள்ளார்.