அ.தி.மு.க.வின் பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்ட மேனாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் இன்று (8.9.2025) காலை டில்லி செல்கிறார். அங்கு, பாஜக மூத்த தலைவர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, அதிமுக ஒன்றிணைப்பு விவகாரத்தில் அமித்ஷா, நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோரை சந்தித்திருந்த நிலையில், இன்று (8.9.2025) மீண்டும் டில்லி செல்லவுள்ளது அரசியல் களத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மாதம் ரூ.12,500 வழங்கும் திட்டம்
நீயே உனக்கு ராஜா திட்டம் மூலம் வேலையில்லாத இளைஞர்களுக்கு இலவசமாக பயிற்சி அளித்து, ஊதியமும் தருகிறது தமிழ்நாடு அரசு. இதற்கு, https://candidate.tnskill.tn.gov.in/Art/ArtRegistration /Registration/ -க்கு சென்று, உங்கள் தகவல்களை உள்ளிடுங்கள். இதில் நீங்கள் தேர்வு செய்யும் திறமை (ஸ்கில்)க்கான 3 மாத இலவச பயிற்சி வழங்கப்படும். பயிற்சி முடிந்த கையோடு வேலையும், மாதம் ரூ.12,500 ஊதியமும் கிடைக்கும்.
செய்தியும் சிந்தனையும்…
செய்தி: கனவில் தோன்றியதாக இளம் பெண் கூறிய இடத்தில் கிடைத்த அய்ந்து அடி உயர சூலம்! பூஜை செய்து கிராம மக்கள் வழிபட்டனர்!
சிந்தனை: இதைப் போன்ற கப்சாக்கள் கடந்த காலத்தில் ஏற்ெகனவே நடந்து வந்த செய்தி எல்லாம் நாம் அறிந்ததே.