சென்னை செப்.8- சென்னை கிண்டியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல்மற்றும் பயிற்சி மய்யத் தலைவர் ஏ.டி.அசோக் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பயிற்சி மய்யத்தில் வரும் 11ஆம் தேதி சிறுதானிய உணவுப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி வழங்கப்படுகிறது. இதில் சிறுதானிய ஊட்டச்சத்து மாவு மிக்ஸ், சிறுதானிய இட்லி மிக்ஸ், பல தானிய லட்டு, ராகி அடை மிக்ஸ், ராகி முறுக்குமிக்ஸ், புட்டுமிக்ஸ் போன்றவற்றை தயாரிக்க கற்றுக் கொடுக்கப்படும். இத்துடன் விற்பனைக்கான செய்முறைகள் குறித்த விளக்கமும் அளிக்கப்படும்.
இதேபோல, வரும் 12ஆம் தேதி நடைபெறும் காய்கறி பயிர்களில் அங்க வேளாண்மை பயிற்சி வகுப்பில் இயற்கை வேளாண்மையின் கொள்கைகள், மண் வள மேலாண்மை, இயற்கை முறையில் ஊட்டச்சத்து தயாரித்தல், பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, அங்க தரச் சான்றிதழ் பெறுதல் உள்ளிட்டவை குறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் உரையாற்ற உள்ளனர். இத்துடன் வேளாண் இடு பொருட்கள் தயாரித்தலில் பஞ்சகாவ்யா தயாரிப்பு முறை கள் குறித்து செயல்முறை விளக்கம் அளிக்கப்படும்.
அனைத்து தரப்பினரும் இந்த வாய்ப்பை பயன்படுத் திக் கொள்ளலாம். பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் 044-29530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு, முன்பதிவு செய்யுமாறு அறி வுறுத்தப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
நாய்களின் பெருக்கத்தை
தடுக்க நடவடிக்கை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை செப்.8- நாய்களின் பெருக்கத்தை குறைக்க நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது என்று சுகாதா ரத்துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் தெரிவித்தார்.
நாய்க்கடி மருந்து
சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற் றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
திமுக அரசு பொறப்பேற்ற போது, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப் புற ஆரம்ப சுகாதார நிலை யங்களில் பாம்புக்கடி, நாய்க் கடிகளுக்கான மருந்துகள் இல்லை.
கிராமங்களில் பாம்புக் கடி, நாய்க்கடி பாதிப்புகளுக்கு உள்ளாகும்போது, வட்டார மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, மருத் துவக்கல்லூரி மருத்துவமனை களில் தான் வர வேண்டும்.
ஆனால், தற்போது தமிழகத்தில் உள்ள 2,256 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உட்பட அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் பாம்புக்கடி கான ஏஎஸ்வி மருந்து, நாய்க்கடிக்கான ஏஆர்வி மருந்து இருப்பு வைக்கப்பட்டுள்ளது. நாய்களின் பெருக்கத்தை குறைப்பது, நாய்களினால் ஏற்படும் பாடுப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலை மை செயலாளர் மற்றும் சம்பந்தப்பட்டதுறை அமைச்சர் களுடன் கூட்டம் நடத்தப்பட்டது. பின்னர், நாய்களின் பெருக் கத்தை குறைக்கவும், பாதிப்புகளை தடுக்கவும் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.