சென்னை, செப். 8- இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலா ளர் இரா.முத்தரசன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பெரியார் உருவாக்கிய சுயமரி யாதை இயக்கம் இன்று உலகளவில் சமூகநீதிப் போராளிகளுக்கு கருத் தாயுதமாக பயன்பட்டு வருகிறது. இங்கிலாந்து நாட்டில் பல நுற்றாண்டுகளாக இயங்கி வரும் உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் பேரறிஞர்களை போற்றி பாராட்டி வந்திருக்கிறது.
அந்த வரிசையில், கடந்த 4ஆம் தேதி பெரியாரின் உருவப் படத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து பெரியாரின் சிறப்புகளை எடுத்துக்கூறியிருப்பது பொருத்தமானதாகும். இந்த நிகழ்ச்சியில் சுயமரியாதை இயக்கத்தின் ஆற்றல் மிகுந்த பங்களிப்பு தொடர்பான 2 ஆய்வுப் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இது தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் பெருமையளிக்கும் நிகழ்வாகும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.