அரியலூர், செப். 8- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்து ரையாடல் கூட்டம் செந்துறை ஒன்றியம் இருங்களாக் குறிச்சி வேல்முருகன் இல்லத்தில் நடை பெற்றது.
மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செந்துறை ஒன்றிய தலைவர் முத்தமிழ் செல்வன் கடவுள் மறுப்பு கூறினார் . மாவட்டத் தலைவர் விடுதலை நீலமேகன் அனைவரையும் வரவேற்றார். கலந்துரையாடல் கூட்டத்தில் தந்தை பெரியாரின் பிறந்த நாளை எழுச்சியோடு கொண்டாடும் வழிமுறைகளையும்,
தமிழர் தலைவரின் கடின உழைப்பு, சுயமரியாதை இயக்கத் தினுடைய சிறப்புகள், நூற்றாண்டு விழா மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டியதன் அவசியம்,பெரியார் உலகமயமாகி உள்ள பாங்கு ஆகியவற்றை விளக்கி கழக ஒருங்கிணைப்பாளர் இரா ஜெயக்குமார் தொடக்கஉரை நிகழ்த்தினார்.
பொதுக்குழு உறுப்பினர் இரத்தின ராமச்சந்திரன், ராஜா அசோகன், மாவட்ட துணைச் செயலாளர் பொன். செந்தில்குமார் மாவட்ட விவசாய அணி தலைவர் மா. சங்கர் விவசாய அணி செயலாளர் ஆ. இளவழகன், வழக்குரைஞர் அணி அமைப்பாளர் மு. ராஜா காப்பாளர் சு. மணிவண்ணன், ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் அ. சேக்கிழார், செயலாளர் ஆ.ஜெயராமன், தா.பழூர் ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம் அரிய லூர் ஒன்றிய தலைவர் சி.சிவக் கொழுந்து, செயலாளர் த. செந்தில், செந்துறை ஒன்றிய செயலாளர் ராசா.செல்வக்குமார், மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணன், மாவட்ட தலைவர் விடுதலை .நீலமேகன், மாநில ப.க .அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச்செல்வன், ஆகியோர் உரையாற்றியதற்கு பின்னர் கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சுயமரியாதை இயக்கத்தினுடைய சிறப்புகளை விளக்கியும் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட வேண்டிய அவசியம் பற்றியும் மாநில மாநாட்டிற்கு திரளாக பங்கேற்க வேண்டியது குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார் . பகுத்தறிவாளர் கழகப் பொறுப்பாளர் வேல்முருகன் நன்றி கூறினார். 80ஆம் ஆண்டு பிறந்தநாள் கண்ட கழகப் பேச்சாளர் புலவர் வை. நாத்திக நம்பிக்குஅரியலூர் மாவட்டத்தின் சார்பில் கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் தங்க சிவமூர்த்தியின் மாமியாரும் ஆசிரியர் சிவசக்தி, வேளாண் அலுவலர் வேல்முருகன் ஆகியோரின் தாயாருமாகிய வி.தமிழரசிமற்றும் அரியலூர் மாவட்ட செயலாளர் மு. கோபாலகிருஷ்ணனின் சகோதரி மரகதம் ஆகியோரின்மறைவிற்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.
பெரியாரைஉலகமயமாக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூ ரில் 100 கோடி மதிப்பீட்டில் அமையவிருக்கும் “பெரியார் உலகத்திற்கு” தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டு கோளை ஏற்று மாவட்ட கழகத் தின் சார்பில் நிதித் திரட்டி ரூ 10 லட்சம் வழங்குவது என முடிவு செய்யப்படுகிறது.
அறிவாசான் தந்தை பெரியாரின் 147 ஆவது பிறந்த நாள் விழாவினை எதிர்வரும் செப் – 17ஆம் தேதியன்று மிகுந்த எழுச்சியோடும் மகிழ்ச்சியோடும் கொண்டாடிடும்வகையில், கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடியேற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவதெனவும், மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் திராவிடர்களின் திருநாளாக கொண்டாடி மகிழ்வதென ஒரு மனதாக முடிவு செய்யப்படுகிறது.
குடும்பத்துடன்
2025 அக்டோபர் 4ஆம் தேதி அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிவாகனங்களில் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
தந்தை பெரியாரின் 147ஆவது பிறந்த நாள் மற்றும் செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டை விளக்கி சுவரெழுத்து மற்றும் சுவரொட்டிப் பிரச்சாரம் செய்வதென முடிவு செய்யப்படுகிறது.
புதிய விடுதலை சந்தாக்கள் சேர்த்தல்
இனமானஏடாம்விடுதலைக்கு சந்தாக்களை புதுப்பிப்பதெனவும் புதிய சந்தாக்களை சேர்த்து அளிப்பதெனவும் தீர்மானிக்கப் படுகிறது.
நிகழ்ச்சியில் பொதுக் குழு உறுப்பினர் சி. காமராஜ் மாவட்ட துணைத் தலைவர் இரா திலீபன் ஆசிரியர் ராஜேந்திரன் சி தமிழ் சேகரன், ஆண்டிமடம் ஒன்றிய தலைவர் இரா.தமிழரசன், பொன்பரப்பி சுந்தரவடிவேல், குழுமூர் சுப்பராயன் உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.