கிருட்டினகிரி, செப். 8- கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் 5.9.2025 – வெள்ளிக்கிமை மாலை 4.00 மணி அளவில் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாரூர் கீழ்குப்பத்தில் கூட்டம் நடைபெற்றது.
கிருட்டினகிரி மாவட்ட கழகத் தலைவர் கோ.திராவிடமணி தலைமை வகித்து கழக செயல்பாடுகள் குறித்து பேசினார். மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்திற்கு மாவட்டத் துணைத் தலைவர் வ. ஆறுமுகம், பொதுக்குழு உறுப்பினர் கி.முருகேசன், மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட ப.க.செயலாளர் க.வெங்கடேசன், மாவட்ட ப.க.துணைத் தலைவர் மு.வேடியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் இயக்க செயல்பாடுகள் குறித்தும் பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசியம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்கிட வேண்டும் செங்கல்பட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பதின் அவசியம் குறித்தும் இளைஞரணி சார்பில் பெரியார் சமூக காப்பு அணியில் இளைஞர்கள் மாணவர்களை அதிகம் பங்கேற்கச் செய்வது மற்றும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வருகின்ற 13/09/2025- அன்று கிருட்டினகிரி மாவட்டம் வருகை குறித்தும் விரிவாக எடுத்துக் கூறி சிறப்புரையாற்றினார்.
மாநில பகுத்தறிவாளர் கழக துணைப் பொதுச் செயலாளர் அண்ணா சரவணன், மாநில இளைஞரணி துணிச் செயலாளர் மா.செல்லதுரை, மாவட்ட ப.க.தலைவர் ச.கிருட்டினன், மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சி.சீனிவாசன், மேனாள் மண்டலத் தலைவர் பழ.வெங்கடாசலம், மேனாள் மாவட்டத் தலைவர் த. அறிவரசன் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
கூட்டத்தில் ஊற்றங்கரை ஒன்றியத் தலைவர் அண்ணா அப்பாசாமி, செயலாளர் செ.சிவராஜ், காவேரிப்பட்டணம் ஒன்றியத் தலைவர் பெ.செல்வம், செயலாளர் பெ.செல்வேந்திரன், மத்தூர் ஒன்றியத் தலைவர் சா.தனஞ்செயன், மாவட்ட தொழிலாளரணி தலைவர் சி.வெங்கடாசலம், சட்டக் கல்லூரி மாநில மாணவர் கழக துணைச்செயலாளர் ச.மணிமொழி, மாவட்ட இளைஞரணி து.செயலாளர் பூ. இராசேந்திரபாபு, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் மா.சிவசக்தி, கீழ்குப்பம் பொ.கிருஷ்ணமூர்த்தி, ப. தமிழரசு, க.பழனிச்சாமி, இல.குமார், நா.அகிலன், எம்.பெருமாள், கே.எம்.சக்திவேல், பையூர் செ.வீரபாண்டி,பொடார் பு.கணேசன் உள்பட கழகத்தோழர்கள் கலந்துகொண்டனர். இறுதியாக மேனாள் மாவட்ட இணைச் செயலாளர் க.பழனிசாமி நன்றி கூறினார்.
கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
காவேரிப்பட்டணம் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் வீ.சி.கோவிந்தசாமி, கிருட்டினகிரி மாவட்ட திமுக செயலாளர் சட்டமன்ற உறுப்பினர் தே.மதியழகன் அவர்களின் தாயார் கண்ணம்மா தேவராஜ், தருமபுரி மேனாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சின்னசாமி, திருப்பத்துர் வடசேரி மீரா அம்மையார் உள்ளிட்டோர் மறைவிற்கும் இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது.
கிருட்டினகிரி மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப்பித்தும், புதிய சந்தாக்களை சேர்க்கும் பணியில் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம்” என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட கழகத்தின் சார்பில் நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
உலக மனிதநேய தலைவர் அறிவுலக ஆசான் தந்தை பெரியார் 147 -ஆவது பிறந்த நாள் விழாவினை ( செப் – 17 சமூகநீதி நாள்) மிக எழுச்சியோடு கொண்டாடும் வகையில், கழகத் தோழர்களின் இல்லங்களில் கழகக் கொடி ஏற்றி இனிப்புகள் வழங்கி கொண்டாடுவது, கிருட்டினகிரி மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் தந்தை பெரியார் படங்களை அலங்கரித்து வைத்தும், தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தும் திராவிடர்களின் எழுச்சி பெருவிழாவாக சிறப்பாக கொண்டாடி மகிழ்வது என முடிவு செய்யப்படுகிறது.
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதியின் சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.
சேலத்தில் நடைபெறும் பெரியார் சமூக காப்பு அணி பயிற்சியில் மாவட்டத்திலிருந்து இளைஞர்கள் மாணவர்களை பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்படுகிறது
வருகின்ற 13/09/2025 அன்று கிருட்டினகிரி மாவட்டம் வருகைத்தரும் தமிழர் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கிருட்டினகிரி மாவட்ட கழக சார்பில் சிறப்பான வரவேற்பு அளிப்பது என தீர்மானிக்கப்படுகிறது.