சென்னை, செப். 7– அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, நேற்று (செப். 6, 2025) ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
பிரிந்து போனவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்றார் கே.ஏ.செங்கோட்டையன். இதனை விரும்பாத – ஏற்றுக்கொள்ளாத அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளராகப் பொறுப்பு வகித்துவந்த கே.ஏ.செங்கோட் டையன், அதிமுகவின் அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்படுகிறார் என்று அவரது அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளார்.
அவருடன் இணக்கமாக உள்ள வர்களும் கட்சியிலிருந்து நீக்கப் பட்டதாக அறிவித்துள்ளார்.