அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க செப்.30 வரை அவகாசம்

1 Min Read

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன் 20இல் தொடங்கியது. இந்நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் செப்.30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே வகுப்புகள் துவங்கிய நிலையில், பல்வேறு சூழல்களால் யாரேனும் விண்ணப்பிக்க தவறியிருந்தால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இங்கு அல்ல, குஜராத்தில்தான்

மாணவர்கள் பையில்
காண்டம்ஸ், கத்தி… அதிர்ச்சி!

அகமதாபாத்தில் பள்ளி ஒன்றில் மாணவர்களின் பைகளை பரிசோதித்த ஆசிரியர்களுக்கு ஒரே அதிர்ச்சி. காரணம், பைகளில் நோட்டு புத்தகங்கள் தவிர காண்டம்ஸ், கருத்தடை மாத்திரைகள், ஆல்கஹால், ஆபாசப் புத்தகங்கள், பணம், ஆடம்பர பொருள்கள் உள்பட பல்வேறு பொருள்கள் இருந்துள்ளன. இதற்கெல்லாம் முக்கிய காரணம், சிறுவயதிலேயே இணைய வலைதளத்தில் தேவையில்லாத நிறைய விஷயங்களை குழந்தைகள் பார்ப்பதுதான் என உளவியலாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *