திருச்சி, செப். 7– பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 5.9.2025 அன்று ஆசிரியர் நாள் விழா உற்சாகமாக கொண்டா டப்பட்டது.
பள்ளி முதல்வர் தலைமையில் நடைபெற்ற விழாவிற்கு மாண வர்கள் தங்களின் ஆசிரியர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக பாடல்கள், கவிதைகள், நாடகங்கள் மற்றும் நடன நிகழ்ச்சிகளை வழங்கினர். ஆசிரியர்களுக்கான சிறப்பு, நினைவுப் பரிசுகளும், பள்ளி நூலகத்திற்கு 7000 ரூபாய் மதிப்புள்ள நூல்களை ஆசிரியர் தின நினைவுப் பரிசாக வழங்கினர்.
மாணவர்கள் ஆசிரியர் களுக்காக ஏற்பாடு செய்த சிறப்பு நிகழ்ச்சிகள் அனை வரையும் கவர்ந்தன. ஆசிரியர் களின் உழைப்பையும், அர்ப் பணிப்பையும் மதிக்கும் விதமாக மாணவர்கள் உரையாற்றி அவர்களுக்கு பாராட்டுகளைத் தெரிவித்தனர்.விழாவின் இறுதியில் முதல்வர் நன்றி கூறி, ஆசிரியர்களின் பங்களிப்பு மாணவர்களின் வாழ்க்கையில் ஒரு பெரும் வழிகாட்டியாக இருப்பதை வலியுறுத்தினார்.