வேல்ஸ், செப். 7– பிரிட்டனின் துணைப் பிரதமர் ஏஞ்சலா ரெய்னர் லண்டன் புறநகரில் சொந்தமாக வீடு ஒன்று வாங்கினார். அதற்கான வரியைத் சரியாக அந்நிறுவன வரியை முறையாக செலுத்தவில்லை. வரி ஏற்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து தான் செய்த தவற்றுக்கு மன்னிப்பு கேட்டு உருக்கமான கடிதம் எழுதி தன்னுடைய துணைப் பிரதமர் பதவியில் இருந்தும் விலகியுள்ளார்.
பிரிட்டன் வரலாற்றி லேயே மிகவும் இளவயது துணைப்பிரதமர் என்று அழைக்கப்படும் ஏஞ்சலா ரெய்னர் லண்டன் புறநகர் ஒன்றில் வீடு வாங்கி உள்லார். வீட்டிற்கான் தொகை மற்றும் அரசுக்கு செலுத்தவேண்டிய வரியைக் கொடுத்துள்ளார்.
இந்த நிலையில் தணிக்கையின் போது அவர் அரசுக்கு செலுத்த வேண்டிய வரியில் முறைகேடு செய்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இதனை அடுத்து பிரிட்டன் தணிக்கை வாரியம் அளித்த அறிக் கையைத் தொடர்ந்து, தனது தவற்றை உணர்ந்து கொண்டார்.
இது தொடர்பாக பிரதமருக்கு அவர் எழுதிய கடிதத்தில் தன்னுடைய செயலால் அரசுக்கு வரி இழப்பு ஏற்பட்ட்டுவிட்டது என்றும் இதற்கு மேல் தான் பதவியில் இருக்க தகுதியானவர் என்பதை உணர்ந்ததால் தன்னை பதவியில் இருந்து விடு விக்குமாறும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இதனை அடுத்து அவர் துணைப் பிரதமர் மற்றும் ஆளுங்கட்சியின் துணைத் தலைவர் ஆகிய பொறுப்புகளிலிருந்து விலகினார்.