பிலடெல்பியா, யுஎஸ், செப். 7– அய்க் கிய அமெரிக்க பெடரல் நீதிமன்றம் கூகுள் நிறுவனத்திற்கு பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாப்பதில் தவறிய தற்காக, கூகுள் நிறுவனம் 425 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ₹3,535 கோடி) இழப்பீடு வழங்க வேண்டும் என்று நடுவர் குழு உத்தரவிட்டது.
பயனர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் செயலிகளைப் பயன் படுத்தும்போது, தங்கள் தனிப்பட்ட தகவல்களை கூகுள் நிறுவனம் சேகரிப்பதற்கு அனுமதி அளிக்கலாமா என்று தேர்வு செய்யும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. தங்கள் தகவல்களைச் சேகரிக்க வேண்டாம் என்று பயனர்கள் தெளிவாகக் குறிப்பிட்டிருந்தபோதிலும், கூகுள் அவர்களின் தக வல்களைத் தொடர்ந்து சேகரித்ததாகக் குற்றச் சாட்டு எழுந்தது.
இதனால் அதிருப்தி யடைந்த பயனர்கள் ஒன்றிணைந்து ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்தனர். இந்த வழக்கு விசாரணை சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்றது. விசாரணை முடிவில், பயனர்களின் தனிப்பட்ட தகவல்களைப் பாதுகாக்கத் தவறியதற்காக, கூகுள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப் பளித்துள்ளது.
கூகுளின்
நிலைப்பாடு
இந்த விவகாரத்தில் எந்தத் தவறும் செய்ய வில்லை என்று கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. சேகரிக்கப்பட்ட தகவல் கள் தனிப்பட்ட தகவல் கள் அல்ல என்றும், அவை முறையாகப் பாதுகாக்கப்பட்டன என்றும் நிறுவனம் கூறி யுள்ளது. அத்துடன், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப் போவதாகவும் கூகுள் தெரிவித்துள்ளது.