பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மூத்தோர் நாள் விழா

ஜெயங்கொண்டம், செப். 7– ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில்  மூத்தோர் நாள் விழா மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது.

மாணவர்களின் தாத்தா-பாட்டிகள் சிறப்பாக அழைக்கப்பட்டு விழாவில் கலந்து கொண் டனர். விழாவிற்கு பள்ளி முதல்வர் தலைமையேற்று சிறப்புரையாற்றினார். மூத்தோரை மதிக்கும் பண்பும், அவர்கள் வாழ்க்கைப் பயணத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய நற்செயல்களும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறப்பட்டன.

மாணவர்கள் தாத்தா-பாட்டிகளுக்காக பாடல் கள், நடனங்கள், உரைகள் என பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தினர். விழாவின் இறுதியில் மாணவர்கள் தங்கள் தாத்தா-பாட்டிகளுக்கு அன்புடன் வாழ்த்துப் பரிசுகளை வழங்கி, அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

இந்நிகழ்ச்சியில் ஆசிரி யர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் மூதாட்டோர் பலர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *