கொழும்பு, செப்.7– இலங்கையில் உள்ளூர்ச் சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் சென்ற பேருந்து ஒன்று தேயிலைத் தோட் டத்துக்கு அருகே சுமார் 1,000 அடி ஆழமான பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 15 பேர் உயிரிழந்தனர்; மேலும் 16 பேர் காயமடைந்தனர்.
இந்த விபத்து, நேற்று இரவு எல்லா (Ella) பகுதியில் நடந்து உள்ளது. பேருந்தில் பயணித்தவர்கள் குளிர்ந்த மலைப்பகுதிகளில் தங்களது விடுமுறையை முடித்துவிட்டுத் திரும்பிக் கொண்டிருந்தவர்கள் என்று AFP செய்தி நிறு வனம் தெரிவித்துள்ளது.
முதற்கட்ட தகவல் களின்படி, பேருந்து மற்றொரு வாகனத்துடன் மோதியதால் கட்டுப் பாட்டை இழந்து, பாதுகாப்புத் தடுப்பை உடைத்துக் கொண்டு பள்ளத்தாக்கில் விழுந்து உள்ளது.
இலங்கையில் உள்ள வளைந்து நெளிந்த மலைச் சாலைகள் உலகின் மிகவும் ஆபத்தான பாதைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றன.
இலங் கையில், ஆண்டுதோறும் சராசரியாக 3,000 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.