ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் தந்தை பெரியார் படத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த நிகழ்வின் காட்சிப் பதிவு ஓசூரில் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் ஒய். பிரகாஷ் ஏற்பாட்டில், திரையிடபட்டது – மாநில இளைஞரணி துணை அமைப்பாளர் சீனிவாசன் மாநகர மேயர் எஸ்.ஏ.சத்யா, துணைமேயர் ஆனந்தையா, மாவட்ட பொருளாளர் சுகுமாரன், மாநில பகுத்தறிவு கலை இலக்கிய மாநில துணைச் செயலாளர் என்.எஸ்.மாதேஸ்வர், மாவட்ட இளைஞரணி செயலாளர் சுமன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் கலைச்செழியன் கலந்து கொண்டனர்.
கழகத்தின் சார்பில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. மாவட்ட கழகத் தலைவர் சு.வனவேந்தன், பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வம், கண்மணி, மாவட்ட செயலாளர் மா.சின்னசாமி, மாவட்ட துணைச் செயலாளர்கள் ச.எழிலன், ஜெயசந்திரன், ஈரோடு பாண்டியன், திருவெட்டியூர் துரை இராவணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.