முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் –
பெரியாரின் பேரன் என்பது மெய்ப்பிக்கப்படுகிறது!
கவிஞர்
வைரமுத்து
ஆக்ஸ்ஃபோர்டு
பல்கலைக் கழகத்தில்
பெரியார் படம்
திறக்கப்பட்டிருக்கிறது
இது
பெரியாருக்கு வரலாறு;
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலினுக்கும் வரலாறு
இதன்மூலம்
பெறப்படும் செய்திகள் மூன்று
ஆசியாவின் சாக்ரடீசை
ஐரோப்பா நினைவுகூர்கிறது
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
பெரியாரின் பேரன் என்பது
மெய்ப்பிக்கப்படுகிறது
பெரியார் என்ற தத்துவம்
இடம் கடக்கும்
காலம் கடக்கும்
இனம் கடக்கும்
என்பது மெய்யாகிறது
முதலீடுகளை
ஈர்க்கப்போன இடத்தில்
முதலீடு செய்கிறார் முதலமைச்சர்
சிந்தை அணு ஒவ்வொன்றும்
சிலிர்த்து நிற்கிறோம்;
வாழ்த்துகிறோம்.
லண்டன் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியார் உருவப் படத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து அரிய சொற்பொழிவாற்றினார். (4.9.2025)