மற்றவர்கள் எல்லாம் நினைக்க முடியாத அளவிற்கு, மிக உயரத்திற்குப் போயிருக்கிறார்– உலகை வென்றிருக்கிறார்; ஒப்பாரும் மிக்காருமில்லாத தந்தை பெரியார்!

32 Min Read

லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் என்ற முதலீட்டை செய்திருக்கிறார் முதலமைச்சர்!
முத்தமிழறிஞர் கலைஞருக்குப் பிறகு, இது வெற்றிடம் அல்ல; உலகமே வந்து பெற்றுத் திரும்பக் கூடிய கற்றிடமாக்கியுள்ளார் ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர்!
உரத்தநாடு பெரியார் உலகத்திற்கு நிதியளிப்புப் பெரு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

உரத்தநாடு, செப்.6 – மற்றவர்கள் எல்லாம் நினைக்க முடியாத அளவிற்கு, மிக உயரத்திற்குப் போயிருக்கிறார்– உலகை வென்றிருக்கிறார்; ஒப்பாரும் மிக்காருமில்லாத தந்தை பெரியார்! லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் என்ற முதலீட்டை செய்திருக்கிறார் முதலமைச்சர்! முத்தமிழறிஞர் கலைஞருக்குப் பிறகு, இது வெற்றிடம் அல்ல; உலகமே வந்து பெற்றுத் திரும்பக் கூடிய கற்றிடமாக்கியுள்ளார் ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் உலகத்திற்கு நிதியளிப்புப் பெரு விழா! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா!

நேற்று (5.9.2025) உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், தொண்டராம்பட்டு கவிஞர் பாரதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடி  செலவில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு 17 லட்சம் ரூபாய் நிதியளிப்பு பெரு விழா! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில், நிதியைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்த சிறப்பு மிகுந்த, பெருந்திரள் மாநாடு போல, தொண்டராம்பட்டு பகுதியில் மிகச் சிறப்பாக, ஒரு புதிய எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சிறப்பான நிகழ்விற்கு வந்திருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய தலைதாழ்ந்த நன்றி, வணக்கம்!

இங்கே வழங்கப்பட்டு இருக்கின்ற 17 லட்சம் ரூபாய் பெரியார் உலகத்திற்காகக் கொடுக்கப்பட்டது. இந்த நிதியைத் தந்தவர்கள் அத்துணை பேருக்கும் எங்களுடைய தலைதாழ்ந்த நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் நாடு என்று நாங்கள் பெருமையோடு அழைக்கின்ற இந்தப் பெரியார் நாடு, உரத்தநாடு பகுதி – மூன்று பகுதிகளாக இயக்கப் பணிகளை, கழகப் பணிகளை விரைவாக, வேகமாகச் செய்யவேண்டும் என்பதற்காகப் பிரிக்கப்பட்டது.

ஒன்று வடக்கு, இன்னொன்று தெற்கு. அதிலேயே ஒரத்தநாடு நகரத்தையும் உள்ளடக்கிய பகுதி வடக்கில் உள்ளது.

எப்பொழுதுமே உரத்தநாடு என்றால், பெரியார் நாடு.

இதுவரை இயக்கம் கேட்டதையெல்லாம்

 

பெரியாருக்காக, பெரியார் நாடு பெருநிதி அளிக்கிறது!

உரத்தநாடு, செப்.6 – மற்றவர்கள் எல்லாம் நினைக்க முடியாத அளவிற்கு, மிக உயரத்திற்குப் போயிருக்கிறார்– உலகை வென்றிருக்கிறார்; ஒப்பாரும் மிக்காருமில்லாத தந்தை பெரியார்! லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் பெரியார் என்ற முதலீட்டை செய்திருக்கிறார் முதலமைச்சர்! முத்தமிழறிஞர் கலைஞருக்குப் பிறகு, இது வெற்றிடம் அல்ல; உலகமே வந்து பெற்றுத் திரும்பக் கூடிய கற்றிடமாக்கியுள்ளார் ‘திராவிட மாடல்’ அரசின் நாயகர்  என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

பெரியார் உலகத்திற்கு நிதியளிப்புப் பெரு விழா! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா!

நேற்று (5.9.2025) உரத்தநாடு தெற்கு ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில், தொண்டராம்பட்டு கவிஞர் பாரதி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற திருச்சி சிறுகனூரில் ரூ.100 கோடி  செலவில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு 17 லட்சம் ரூபாய் நிதியளிப்பு பெரு விழா! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழாவில், நிதியைப் பெற்றுக்கொண்டு சிறப்புரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது சிறப்புரை வருமாறு:

இந்த சிறப்பு மிகுந்த, பெருந்திரள் மாநாடு போல, தொண்டராம்பட்டு பகுதியில் மிகச் சிறப்பாக, ஒரு புதிய எழுச்சியோடு நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சிறப்பான நிகழ்விற்கு வந்திருக்கக் கூடிய உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

எங்களுடைய தலைதாழ்ந்த நன்றி, வணக்கம்!

இங்கே வழங்கப்பட்டு இருக்கின்ற 17 லட்சம் ரூபாய் பெரியார் உலகத்திற்காகக் கொடுக்கப்பட்டது. இந்த நிதியைத் தந்தவர்கள் அத்துணை பேருக்கும் எங்களுடைய தலைதாழ்ந்த நன்றியை, வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பெரியார் நாடு என்று நாங்கள் பெருமையோடு அழைக்கின்ற இந்தப் பெரியார் நாடு, உரத்தநாடு பகுதி – மூன்று பகுதிகளாக இயக்கப் பணிகளை, கழகப் பணிகளை விரைவாக, வேகமாகச் செய்யவேண்டும் என்பதற்காகப் பிரிக்கப்பட்டது.

ஒன்று வடக்கு, இன்னொன்று தெற்கு. அதிலேயே ஒரத்தநாடு நகரத்தையும் உள்ளடக்கிய பகுதி வடக்கில் உள்ளது.

எப்பொழுதுமே உரத்தநாடு என்றால், பெரியார் நாடு.

இதுவரை இயக்கம் கேட்டதையெல்லாம் கொடுக்கின்ற, இயக்கம் எதிர்பாராத அளவிற்கு அதிக மாகக் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நாடு, பெரியார் நாடு.

பெரியாருக்காக,
பெரியார் நாடு கொடுக்கிறது!

பெரியார் நாடு கொடுப்பதெல்லாம் யாருக்காக? பெரியாருக்காக, பெரியார் நாடு கொடுக்கிறது.

அப்படிப்பட்ட பெரியாருக்காக, சலிப்பில்லாமல், சங்கடமில்லாமல் பணியாற்றிக் கொண்டிருப்பது பெரியார் நாடு.

நன்கொடையை மகிழ்ச்சியோடு கொடுத்தார்கள் என்று சொல்லும்போது, இந்த நேரத்தில் உணர்ச்சிப்பூர்வ மாக நான் அவர்களைப் பெருமையோடு நினைக்கிறேன். இதோ ஒரு பட்டியல் – இத்தனை தோழர்களுடைய தியாகம், உழைப்பு அதில் அடங்கியுள்ளது.

இன்னமும் ஆணவக் கொலைகள் இந்த நாட்டில் நடந்துகொண்டிருக்கின்றன என்றால், நோய் முழுமை யாக அடக்கப்படவில்லை. அந்தத் தொற்று நோயைத் தடுக்க மேலும் நாம் தயாராகவேண்டும் என்கின்ற உணர்வு ஒரு பக்கத்தில் இருக்கிறது.

இன்னொரு பக்கத்தில் பார்த்தீர்களேயானால், உயிர் கொடுத்தார்கள் – அதை விரும்பிக் கொடுத்தார்களா? விபத்தினாலா? என்பது வேறு விஷயம்.

அய்யா கைலாசமுத்து!

நம்முடைய குணசேகரன் அவர்களுடைய தந்தையார். அதேபோன்று மிகப்பெரிய ஆபத்திலிருந்து மீண்டு வந்தவர் நம்முடைய அய்யா கைலாசமுத்து அவர்கள். உரத்தநாடு பகுதியில். தந்தை பெரியார் அவர்கள், கட்டடப் பணிகளையெல்லாம் கைலாசமுத்து அவர்களிடம்தான் கொடுப்பார்கள்.

பெரியார் நாடு என்பது மிகப்பெரிய வரலாறு!

இப்படி நன்கொடை என்று கொடுக்கின்றபோது, உயிர்க் கொடை உள்பட கொடுப்பதுதான் பெரியார் நாடு என்பதும் மிகப்பெரிய வரலாறாகும்.

இன்றைக்குப் பெரியார் மய்யம் – அங்கே எத்தனையோ எதிர்நீச்சல்களுக்கிடையே பணிகள் சிறப்பாக நடைபெறுகின்றன. அதனை நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் திறந்து வைத்திருக்கிறார்கள் என்பது மிகச் சிறப்பான ஒன்றதாகும்.

கேட்டபொழுதெல்லாம் பெரியார் நாடு கொடுக்கத் தவறியதில்லை.

போராட்டமா?

கொள்கை வீரர்களைத் தருகிறோம்.

இயக்க நிகழ்ச்சிகளா? மாநாடுகளா? எங்களுடைய வற்றாத உழைப்பைத் தருகிறோம் என்று தரக்கூடிய தோழர்களே, உங்கள் உழைப்பிற்குத் தலைவணங்கி நன்றி செலுத்துகின்றேன்.

மருத்துவர்கள், என்னை வெளியூர் பயணத்தைத் தவிர்க்கவேண்டும் என்று சொன்னார்கள். ஏனென்றால், காதில் ஒரு பெரிய அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு மணிநேரம் அந்த அறுவைச் சிகிச்சை நடைபெற்றது. அதற்குமுன், மருத்துவர்கள் ஆலோசனை நடத்தினார்கள், 92 வயதாகிறதே இவ ருக்கு,  முழு மயக்க மருந்து கொடுக்கலாமா? என்பதற்காக.

பிறகு, காதில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.  இன்னமும் காதில் வலி இருக்கிறது. இந்த வலியோடு நீங்கள் வெளியூருக்குப் பயணம் செய்யவேண்டுமா? என்று மருத்துவர் கேட்டார்.

எங்கள் உறவுகளை நாடி, பாசத்தை நாடி வந்திருக்கின்றோம்!

இந்த வலியெல்லாம், எங்களுடைய தோழர்களைப் பார்த்தால் தீர்ந்துவிடும்; மருந்து இங்கே இல்லை; அங்கேதான் இருக்கிறது. உடனடியாக பலனளிக்கக் கூடிய சிகிச்சை என்ற உணர்வோடு உங்களைப் பார்க்கின்றபோது, எங்கள் உறவுகள் எங்கே இருக்கிறது?  என்பதை உணர்ச்சிபூர்வமாக உணர முடிகின்றது. எனவேதான், பணத்தை நாடி வரவில்லை; நன்கொடையை நாடி வரவில்லை. எங்கள் உறவுகளை நாடி, பாசத்தை நாடி வந்திருக்கின்றோம். அதனை நீங்கள் அன்போடு காட்டியிருக்கிறீர்கள்.

நேரிடையாக இங்கே வந்து கலந்துகொண்டாலும்,  கலந்துகொள்ளாவிட்டாலும், தோழர்கள் ஒவ்வொரு நாளும்  நன்கொடைகளைப் பெறுவதற்கான பணிகளை மேற்கொள்வார்கள்.

நான், மருத்துவமனையில் இருந்தபொழுதுகூட, தோழர்கள் எங்கெங்கே போனார்கள்?  என்னென்ன செய்தார்கள்? என்பதையெல்லாம் அறிந்துகொண்டேன்.

“மகிழ்ச்சிக்குரிய செய்தி’’, “மகிழ்ச்சிக்குரிய செய்தி’’ என்ற தலைப்பில் செய்தி!

தோழர் குணசேகரன், ஒரு பெரிய தலைப்பைப் போட்டுக் கொடுப்பார். “மகிழ்ச்சிக்குரிய செய்தி’’, “மகிழ்ச்சிக்குரிய செய்தி’’ என்பது – அந்தத் தலைப்பு இன்றைய நிலவரம் என்று சொல்வதைப் போன்று இருக்கும்.

மிகப்பெரிய அளவிற்கு அந்தப் பணிகளைச் செய்து, நீங்கள் இன்றைக்கு 17லட்சம் ரூபாயைத் திரட்டிக் கொடுத்திருக்கிறீர்கள்.

தெற்கை, வடக்கு மிஞ்சிவிடும் என்று உத்தரவாதம் தருகிறார் மேனாள் நிதியமைச்சர்!

இந்த நிதியை தெற்கு ஒன்றியம் மட்டும் திரட்டிக் கொடுத்திருக்கிறது. வழக்கம்போல் தெற்கு முந்திக் கொண்டது. வடக்கும் பின்னால் இருக்கிறது. வடக்கு நிச்சயம் இடக்கு செய்யாது. அடுத்தக்கட்டமாக அவர்கள் நிதியைத் தருவார்கள்.

இந்தப் பணியின்மூலம் ஒரு பகுதி முடிந்தி ருக்கிறது. இன்னொரு பகுதி பாக்கி இருக்கிறது. அதற்கு விரைவில் ஒரு விழா, அத்துணை தோழர்கள் முன்னிலையில் சிறப்பாக நடைபெறும்.

தெற்கை, வடக்கு மிஞ்சிவிடும் என்று சொல்கிறார் நம்முடைய மேனாள் நிதியமைச்சர் அவர்கள். நிதியமைச்சரே சொல்லும்போது, அதற்கு மேல்முறையீடு இல்லை. அப்படியொரு அற்புதமான, ஒரு மகிழ்ச்சியான தருணம் இது.

அடுத்த நிகழ்ச்சியை அவர்கள் எந்தப் பகுதியில் வைக்கிறார்களோ, அந்த இடத்திற்குத் தேதி கொடுக்கத் தயாராக இருக்கிறேன். மருத்துவர்கள், என்ன சொன்னாலும் பரவாயில்லை.

இந்த இயக்கம் அப்படிப்பட்ட ஓர் இயக்கம்.

உலகளாவிய புகழைப்
பெற்றிருக்கின்றார்!

எதிர்பாராமல், நிதிக் கொடுக்கும் விழாவைத் தள்ளி வைத்ததில்கூட ஒரு சிறப்பு இருக்கிறது.

அது என்ன சிறப்பு என்பதை இங்கே தோழர்கள் சொன்னார்கள், கழகப் பொதுச்செயலாளரும் சொன்னார்.

இதைவிட ஒரு பெரிய மகிழ்ச்சி, எல்லையற்ற மகிழ்ச்சி வேறு என்னவாக இருக்கும்? தோழர்களே, நம்முடைய “திராவிட மாடல்’’ ஆட்சியின் ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

மற்றவர்கள் எல்லாம் நினைக்க முடியாத அளவிற்கு, மிக உயரத்திற்குப்  போயிருக்கிறார். உலகை வென்றிருக்கிறார். உலகளாவிய புகழைப் பெற்றி ருக்கின்றார் தந்தை பெரியார்!

கலைஞருக்குப் பிறகு, அந்த இடம் வெற்றிடம் என்று புரியாதவர்கள் சிலர் சொன்னார்கள். அப்போதே தாய்க்கழகத்தின் சார்பில் அவர்களுக்கு நாங்கள் மறுப்புத் தெரிவித்தோம்.

அந்த வெற்றிடத்தை எப்படி, யாரைக் கொண்டு நிரப்புவது- இதுதான் சரியான நேரம் என்று, இதே ஆரியம் ஒரு கணக்குப் போட்டு உளறியது.

ஒரு நடிகரை இந்தப் பந்தயத்தில் இறக்கலாமா? என்று அவரைத் தயாரித்தார்கள். அந்த நடிகர்தான் சொன்னார், வெற்றிடம் என்று.

அப்போதே நாங்கள் தாய்க்கழகத்தின் சார்பில் பதில் சொன்னோம்.

நிச்சயமாக, கலைஞருடைய ஆற்றலை இப்போது ஒப்புக்கொண்டிருக்கிறீர்கள். அதற்காக முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழ்நாடு வெற்றிடம் அல்ல; உலகமே வந்து, பெற்றுத் திரும்பக்கூடிய கற்றிடம்!

‘‘தமிழ்நாடு வெற்றிடம் அல்ல; உலகமே வந்து, பெற்றுத் திரும்பக்கூடிய கற்றிடமாக இருக்கும் தமிழ்நாடு’’ என்று சொன்னோம்.

ஒப்பற்ற உழைப்பின் உருவமாக இருக்கக்கூடிய நம்முடைய முதலமைச்சர் அவர்களுடைய உழைப்பு, சிறப்பு, கூட்டணிகளை அரவணைத்து, எதிரிகளை உரிய அளவிற்குப் புரிந்துகொண்டு, அமைதியாக இருந்து தன்னுடைய பணிகளைச் செவ்வனே செய்து, பலவற்றைச் சாதித்துக் காட்டியிருக்கிறார். தற்போது உலக நாடுகளின் முதலீடுகள் எல்லாம் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன.

தமிழ்நாடுதான் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது!

ஏன், தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள் என்றால், தமிழ்நாடுதான் அமைதிப் பூங்காவாக விளங்குகிறது. இங்கே மதக் கலவரங்கள் இல்லை; இங்கே ஜாதிக் கலவரங்கள் இல்லை. இங்கே ஒரு குழப்பமும் இல்லை.

மாநிலத்தில் ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பி னர்கள், ஆளுங்கட்சியில்தான் இருப்பார்கள்; ஆனால், அமித்ஷாக்கள் உள்ளே புகுந்தவுடன், ஆட்சியைத் தலைமை தாங்குபவருக்கே தெரியாது.  ஆளுங்கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் திடீரென்று தனியே ஒரு குழுவை உருவாக்கி,  ஆட்சி அமைக்க உரிமை கோருவார்கள். உதாரணம் மகாராட்டிர மாநிலம். அதற்காக ஒன்றிய அரசால் அனுப்பப்பட்ட ஆளுநர் தயாராக இருப்பார்.  காலையில் பதவியேற்பு என்றால், இரவு முழுவதும் விழித்துக் கொண்டிருப்பார். இப்படி யெல்லாம் ஒரு கூத்து நடந்தது.

ஆனால், இங்கேயும் ஓர் அடாவடி ஆளுநரை அனுப்பிப் பார்த்தார்கள். அவர்கள் கனவு பலிக்கவில்லை. இங்கே கொஞ்சம்கூட ஆட்டமோ, அசைவோ, நுழைவோ இல்லை.

‘ஆயாராம், காயாராமுக்கு’ இங்கே
இடம் கிடையாது!

சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கலாம்; ‘ஆயாராம் காயாராம்’ என்று வடநாட்டில் சொல்வார்கள், கட்சி மாறுவதற்கு. ஆனால், ‘ஆயாராம், காயாராமுக்கு’ இங்கே இடமே கிடையாது.

திராவிட முன்னேற்றக் கழகக் கூட்டணி எப்போது உருவானது?

தேர்தலுக்கு முன்னால் உருவானது அல்ல: தேர்த லுக்காகவும் உருவானது அல்ல. இது கொள்கைக்காக உருவான கூட்டணியாகும்.

கொள்கைக்காக உருவாக்கப்பட்டதுதான் தி.மு.க. கூட்டணி!

எதிர்க்கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் அவர்கள் இருந்தபோது, காவிரிப் பிரச்சினையா? நீட் தேர்வுப் பிரச்சினையா? அதேபோன்று மற்ற மற்ற பிரச்சினைகளுக்காக உழைக்கக் கூடியவர் – அதற்காக உருவாக்கப்பட்டதுதான் தி.மு.க. கூட்டணி.

அந்தக் கூட்டணியை எப்படியாவது உடைக்க லாம் என்று மூக்கைச் சொரிந்து பார்க்கிறார்கள். ஊடகங்களும் அதற்கு ஒத்து ஊதின. இன்றைக்கு அவர் அங்கே அப்படிப் பேசினார்? அன்றைக்கு இவர் அங்கே இப்படிப் பேசினார்? அந்தக் கூட்டணியிலிருந்து இவர் வருவார், அவர் வருவார் என்று யூகங்களை அவிழ்த்துவிட்டனர்.

இங்கே வந்து ‘ரோடு ஷோ’ நடத்தினார்கள். மோடி வந்தார், ‘காட் ஷோ’ நடத்தினார். சிறீரங்கத்திற்குப் போனார்; இராமேசுவரத்திற்குப் போனார்.  அங்கே சென்று தியானம் மேற்கொண்டார்.

ராஜேந்திர சோழனைப் பிடித்தார்கள்!

எல்லாக் கடவுள்களும் கைவிட்டதும்; பாண்டிய மண்டலத்தைவிட்டு, சோழ மண்டலத்திற்கு வந்து, கடைசியாக ராஜேந்திர சோழனைப் பிடித்தார்கள். ஏனென்றால், ராஜராஜ சோழன் இங்கே வந்துவிட்டார்.

கங்கை கொண்ட சோழபுரம் – கங்கைப் பகுதியை நாம் கையகம் செய்யலாம் என்று நினைத்து, ராஜேந்திர சோழனைப் பிடித்தார்கள்.

அதற்குப் பிறகு என்னாயிற்று என்றால், தமிழ்நாட்டிற்கு அவர் வந்து, திரும்பிய பிறகு, அந்தக் கூட்டணியில் இருந்த ஒருவர் விலகிப் போய்விட்டார்.

‘திராவிட இயக்கத்தை வேரோடு பிடுங்கி எறிவோம்’ என்றார் அமித்ஷா!

அதற்குப் பிறகு அமித்ஷா தமிழ்நாட்டிற்கு வந்தார், திராவிட இயக்கத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என்றார்.

அப்போது நாங்கள் சொன்னோம், ‘‘வேர் எங்கே இருக்கிறது என்பதை உங்களால் கண்டுபிடிக்க முடியாது’’ என்று.

பெரியார் மண் என்கின்ற சக்தி இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல!

அதனால், தமிழ்நாட்டைப் பெரியார் மண் என்று சொல்வதினுடைய அர்த்தமே,  மண்ணுக்குக் கீழேதான் வேர் இருக்கும். ஆகவே, பெரியார் மண் என்கின்ற சக்தி இருக்கிறதே, அது சாதாரணமானதல்ல.

அமித்ஷா வந்து போனவுடன், நேற்றுவரை அந்தக் கூட்டணியில் இருந்தவர் வெளியேறிவிட்டார்.

ஏற்கெனவே இருந்தவர்கள் யாராவது அந்தக் கூட்டணியில் இருக்கிறார்களா? இருப்பார்களா? என்றால், சொல்வதற்கில்லை.

அ.தி.மு.க.வை பிளவுபடுத்தியது யார்?

எனவேதான், அ.தி.மு.க. எதிர்க்கட்சியாக இருக்க லாம்; ஆளுங்கட்சியாக இருக்கலாம். ஆனால், நீண்ட நாள்களுக்கு முன்பாக, அந்தக் கட்சியைப் பிளவு படுத்தியது யார்?

இதே டில்லியில் உள்ள ஒன்றிய ஆட்சிதான். பொம்மலாட்டம் நடத்தியது. இந்த நூலைப் பிடித்து இழுப்பார்கள், உடனே ஒருவர் போவார்; அந்தக் காட்சியை மாற்றுவதற்காக அந்த நூலைப்  பிடித்து இழுப்பார்கள். உடனே இன்னொருவர் போவார்.

பாத்திரங்கள் மாறும்; உருவங்கள் மாறும். செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன!

இன்னமும் அது தொடர்ந்து கொண்டிருக்கின்றது. பாத்திரங்கள் மாறும்; உருவங்கள் மாறும். செயல்கள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன.

ஆனால், நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வெளிநாடுகளுக்குச் சென்று, முதலீடுகளை வாங்கிக் கொண்டிருக்கின்றார். ஆனால், அவர் முதலீடுகளை வாங்குவது மட்டுமல்ல; முதலீடு செய்துவிட்டும் வந்திருக்கிறார்.

உடனே சொல்வார்கள், ‘‘பார்த்தீர்களா,  அவர் ஏதோ சொந்தக் காரணத்திற்காக, வியாபாரம் செய்வ தற்காக வெளிநாட்டில் முதலீடு செய்வதற்காகப் போயிருக்கிறார்?’’ என்று.

பெரியார் என்ற முதலீட்டை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் செய்திருக்கிறார்!

ஆமாம், முதலீடுதான் செய்திருக்கிறார். ஆனால், என்ன முதலீடு தெரியுமா?

பெரியார் என்ற முதலீட்டை, லண்டனில் உள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் செய்திருக்கிறார்.

‘‘உலகம் பெரியார் மயம்; பெரியார் உலக மயம்’’ என்று சொல்லி, பெரியாரை முதலீடு செய்தி ருக்கிறார்.

எதிரிகள் அவரிடம் கிட்டே போக முடியாது. அப்படிப்பட்ட தனிச்சிறப்பு பெரியாருக்கு உண்டு.

உழைத்த தோழர்களே! பெரியாருடைய சிந்தனை எப்படிப்பட்டது என்பதை உங்களுக்குச் சொல்கிறேன்!!

பெரியார் உலகம், ஆய்வு மய்யமாக இருக்கும்!

இந்த நேரத்தில், அடுத்தபடியாக நீங்கள் செய்ய வேண்டிய பணி என்னவென்றால், நீங்கள் உங்களுடைய அன்பை வாரிக் கொடுத்திருக்கிறீர்கள். பெரியார் உலகம் வளர்ந்துகொண்டே இருக்கும். பெரியார் உலகம், ஆய்வு மய்யமாக இருக்கும்.

எப்படிப்பட்ட வரலாறு, எப்படிப்பட்ட எதிர்ப்புகள் என்பதையெல்லாம் வருகின்ற தலைமுறையினர் தெரிந்து கொள்வதற்காக பெரியார் உலகத்தில் வரலாற்றுப் பதிவுகள் அமையவிருக்கின்றன.

21 ஆம் நூற்றாண்டு,
பெரியார் நூற்றாண்டு!

‘பெரியார் உலக மயம்’ என்று சொல்லுகின்ற கருத்து என்பது, எங்களால் இப்போது சொல்லப்படவில்லை. இதோ இது ஒரு சிறிய நூல். இப்போது நடைபெறுகின்ற 21 ஆம் நூற்றாண்டு, பெரியார் நூற்றாண்டு. இதை எப்போது சொன்னோம் தெரியுமா?

திராவிடர் கழக டிரஸ்ட்!

எனக்கு, எடைக்கு எடை தங்கம் கொடுக்கவேண்டும் என்று முடிவு செய்து, இதே தஞ்சையில்தான் கொடுத்தார்கள். அதனால் உருவானதுதான் திராவிடர் கழக டிரஸ்ட்.

25.10.1997 அன்று 28 ஆண்டுகளுக்கு முன்பு, வழங்கப்பட்ட அந்தத் தங்கத்தைப் பெறும்போது சொன்னோம்.

21 ஆம் நூற்றாண்டு பெரியார் நூற்றாண்டு என்று.

அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு.

உலகம் முழுவதும் நம்முடைய கிளைகள் இருக்கின்றன.

தலைநகர், சிகாகோவில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றது.

இங்கிலாந்தில் இருக்கிறார்கள்.

நம்முடைய முதலமைச்சர் அவர்கள், தற்போது ஜெர்மனிக்குச் சென்று, அங்கே உள்ள கொலோன் பல்கலைக் கழகத்திற்குச் சென்றார். அங்கே ‘தமிழ் மணம் கமழ்கிறது’ என்று நம்முடைய முதலமைச்சர் பெருமிதத்தோடு குறிப்பிட்டுள்ளார். கொலோன் பல்கலைக் கழகத்தில், தமிழ் இருக்கை எப்படி இயங்குகிறது? என்று உரியவர்களிடம் கேட்டறிந்தார்.

ஜெர்மன்காரரான பேராசிரியர் ஸ்வெயின் தீவிர பெரியாரிஸ்ட்!

அந்தப் பல்கலைக் கழகத்தில், தமிழ்த் துறையில் இருக்கின்ற அதனுடைய தலைவர் ஸ்வெயின் என்பவர், தீவிர பெரியாரிஸ்ட். ஜெர்மன்காரர். (இவர் ஜெர்மனி பெரியார் பன்னாட்டமைப்பின் பொறுப்பாளர்களில் ஒருவர். திருச்சி, தஞ்சையில் உள்ள நமது பெரியார் கல்வி நிறுவனங்களுக்கு வந்து சென்றவர்) அவர் தமிழ் பேசுவார்.

காரணம், நம்முடைய பெரியார் பன்னாட்டமைப்பு சார்பாக, 2017 ஆம் ஆண்டு ஒரு பெரிய மாநாட்டை ஜெர்மனியில் நடத்தினோம்.

‘எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு’ என்றார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

‘‘இன்றைக்குக்கூட ஒரு பெரிய மகிழ்ச்சி – தேம்ஸ் நதிக்கரைக்கு முன் நின்று கொண்டு, நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். என்ன காரணம் என்றால், நாளைக்குப் பெரியார் படத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் திறந்து வைக்கிறேன். அதுதான் எனக்குக் கிடைத்த மிகப்பெரிய பேறு’’ என்று மகிழ்ச்சி யோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் குறிப்பிட்டார்.

அதைக் கேட்டு எங்களுக்கெல்லாம் எல்லையற்ற மகிழ்ச்சி. அதிலும் கூடுதல் மகிழ்ச்சி, போனஸ் மகிழ்ச்சி என்னவென்று சொன்னால் – இன்று காலையில் பட்டுக்கோட்டையில் மணவிழா ஒன்றை நடத்தி வைக்கச் சென்றேன். அப்போது தோழர்கள் என்னிடம் வந்து சொன்னார்கள்.

40 ஆண்டுகளுக்கு முன்பு தமிழர் தலைவர் அய்யா வீரமணி  கலந்துகொண்டார்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியார் படத்தை ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் திறந்து வைத்து உரையாற்றும்போது,

‘‘1983 செப்டம்பர் 21 ஆம் நாள், இதே ஆக்ஸ்ஃ போர்டு யூனிவர்சிட்டியில், மானமிகு ஆசிரியர் தமிழர் தலைவர் அய்யா வீரமணி அவர்கள் கலந்து கொண்ட தந்தை பெரியார் நூற்றாண்டு விழா நடந்தது. அது நடந்து கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்கு மேல் ஆகிறது. அதற்குப் பிறகு, இன்றைக்கு மீண்டும் ஆக்ஸ்ஃபோர்டில் தந்தை பெரியாரின் பகுத்தறிவு ஒளி பரவுகிறது!’’ பேசியிருக்கிறார் என்று.

இதில் ஒரு முக்கியத்துவம் இருக்கிறது. இந்த இயக்கங்கள் எப்படிப்பட்டவை என்பதை நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எதிரிகளுக்கு உணர்த்தியிருக்கிறார்.

‘இரட்டைக் குழல் துப்பாக்கி’ என்று அண்ணா அவர்கள், அதற்குரிய விளக்கத்தோடு சொன்னார்.

‘‘சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்!’’

‘‘திராவிடர்  கழகம் – திராவிட  முன்னேற்றக் கழகம் இந்த இரண்டில், திராவிடர் கழகம் தேர்தலில் நிற்காது. ஆனால், அவர்களுக்கு ஒரு பணி இருக்கிறது. இராணுவத்தில், ‘‘சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ்’’ என்ற ஒரு படை உண்டு. தமிழில் அதற்கு தூசிப் படை என்று பெயர். ஒரு நாட்டின்மீது  இராணுவம் போர்த் தொடுக்கும்போது,  இராணுவம் களத்தில் நிற்கும் என்பது ஒரு பகுதி. ஆனால், அதற்கு முன்பு, இராணு வத்திற்கு முன்பாக ஒரு படை இருக்கிறது – அந்தப் படை என்ன செய்யும் என்றால், பாதையைப் போட்டுக்கொண்டே செல்லும். படை செல்வதற்கு முன்பு,  பாதை இல்லாத இடத்தில் பாதை போடுவது; பாலம் கட்டவேண்டிய இடத்தில் பாலம் கட்டும். இந்தப் பணிகளைச் செய்வதுதான் சேப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ் படையின் பணியாகும். இவர்கள் ராணுவத்திற்கு போக மாட்டார்கள்.

தாய்க் கழகம் அந்தப் பணியை செய்யும்!

அதே நேரத்தில், எதிர் திசையில் இருந்து எதிரிகள் வருகிறார்களா? அவர்கள் வர முடியாதபடி, இருக்கின்ற பாலத்தை உடைக்கின்ற பணியைச் செய்வார்கள்.

எனவே, நாங்கள் இந்தப் பணியைச் செய்வோம்; தாய்க் கழகம் அந்தப் பணியை செய்யும்’’ என்று சொன்னார்.

அந்தப் பணிகளைச் செய்வதுதான் எங்களுடைய வேலை.

ஜெர்மனிக்கு நாங்கள் சென்றோம். அங்கே உள்ளே பல்கலைக் கழகத்தில் நிதி இல்லாத காரணத்தினால், தமிழ் இருக்கையை எடுக்கப் போகிறோம்  என்று சொன்னார்கள்.

‘விடுதலை’ அறிக்கையும் – முதலமைச்சரின் உடனடி நடவடிக்கையும்!

உடனே ஓர் அறிக்கையை எழுதினோம் ‘விடுதலை’ யில். அந்த அறிக்கையை நம்முடைய முதலமைச்சர் பார்த்துவிட்டு, ‘‘எத்தனைக் கோடி ரூபாய் தேவை’’ என்று, அந்த நிதியை நமது முதலமைச்சர் கேட்டு, அளித்து, அந்தப் பல்கலைக் கழகத்தில் தமிழ் இருக்கை தொடர்ந்தது.

செய்தது தாய்க்கழகம்; அதற்குப் பணம் கொடுத்தது சேய்க் கழகம்!

அந்தத் தமிழ்த் துறையில் பேராசிரியராக இருக்கக்கூடி யவர்தான் டாக்டர் ஸ்வெயின். அதனைச் செய்தது தாய்க்கழகம்; அதற்குப் பணம் கொடுத்தது சேய்க் கழகம்.

எனவேதான், இரட்டைக் குழல் துப்பாக்கி என்று சொல்வது சாதாரணமான சொல் அல்ல.

அருமைச் சகோதரர் பழனி.மாணிக்கம் அவர்கள் உரையாற்றும்போது சொன்னார்.

பழைய புராணங்களையெல்லாம் உள்ளே நுழைக்கி றார்கள். நல்ல நேரம், கெட்ட நேரம் எது என்று அவர்கள் சொல்வார்களாம்.

நல்ல நேரம், கெட்ட நேரம் என்று ஒன்று உண்டா?

பெரியார் நாட்காட்டியைப் பார்த்தீர்கள் என்றால், உங்களுக்கெல்லாம் தெரியும்.

அதில், நாங்களும் நல்ல நேரம் என்று போட்டி ருக்கின்றோம்.

‘நல்ல நேரம்’ என்று போட்டிருக்கிறீர்களே, கொள்கையை விட்டுவிட்டீர்களா, என்றார்!

அதைச் சரியாகப் பார்க்காமல், ஒரு நண்பர் கேட்டார், ‘‘என்னங்க, எல்லோரையும்போல, நீங்களும் கொள்கையை விட்டுவிட்டீர்களா? நல்ல நேரம் என்று போட்டிருக்கிறீர்களே’’ என்றார்.

நன்றாகப் பாருங்கள், அவசரப்படாதீர்கள். 24 மணிநேரமும் நல்ல நேரம்  என்று போட்டிருக்கிறோம் என்றோம்.

அப்படியென்றால், தூங்குவானே? என்று கேட்கலாம்.

தூங்குவது நல்ல விஷயம்தானே! பல பேர் தூக்கமின்மையால் தவிக்கிறார்கள்.

தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால், எதிரிகள் தூக்கத்தை இழந்தார்கள்!

நம்முடைய எதிரிகள் தூக்கமின்மையால் தவிக்கி றார்கள். நம்முடைய கலைஞருக்குப் பிறகு, தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களால், எதிரிகள் தூக்கத்தை இழந்தார்கள்.

தூக்கத்தை இழந்திருக்கிறார்கள்; துக்கத்தைப் பெறுகிறார்கள். பல பேருக்கு, மூழ்குகிற கப்பலில் இருந்து குதிக்கிறோம் என்று சொல்கின்ற பதட்டமான நிலை.

சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது?

ஏன், பெரியார் உலகம் தேவை?

சமூக மாற்றம். ஒரு சமூக மாற்றத்தை ஓர் ஆட்சி செய்வது  என்பது அவ்வளவு சுலபமல்ல.

95 வயதில் பெரியார் அவர்கள்
களத்தில் நின்றார்!

ஜாதி ஒழிப்புக்கு – அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்று தந்தை பெரியார் அறிவித்தார்கள்.

அதற்காக எவ்வளவு ஆண்டுகள் போராடினோம். 50 ஆண்டுகளுக்குமுன் சட்டம் போட்டார்கள். நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று தடைகள் தொடர்ந்தன. கலைஞர் விடவில்லை; நாங்களும் விடவில்லை. 95 வயதில் பெரியார் அவர்கள் களத்தில் நின்றார்.

ஏன்?

‘ஜாதிப் பாம்பு இரண்டு இடத்தில் பாதுகாப்பாக இருக்கிறது’ என்றார் தந்தை பெரியார்!

தீண்டாமை, ஜாதி ஒழிப்பிற்காக. பெரியார்தான்  சொன்னார், ‘‘ஜாதிப் பாம்பை வைக்கத்தில் அடிக்க ஆரம்பித்தேன். அது நெளிந்து நெளிந்து பாதுகாப்பாக இரண்டு இடத்தில் இருக்கிறது.

ஒன்று, கோவில் கருவறை. இன்னொன்று, அரசியலமைப்புச் சட்டத்தில், ‘‘தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது’’ என்றுதான் இருக்கிறதே தவிர, ‘‘ஜாதி ஒழிக்கப்பட்டுவிட்டது’’ என்று இல்லை என்றார்.

அரசியலமைப்புச் சட்டத்தைக் கொளுத்துவதற்காக நம்முடைய தோழர்கள் சென்றார்கள். கண்ணுகுடி யிலிருந்து, தொண்டராம்பட்டிலிருந்து, லால்குடியி லிருந்து, எல்லா பகுதிகளிலிருந்தும் போனார்கள்.

ஆளுநரின் கேள்விக்கு –
இளைஞன் பெரியசாமியின் பதில்!

இன்னுங்கேட்டால், 17 வயதுள்ள ஓர் இளைஞன் – அன்றைக்கு ஆளுநராக இருந்தவர் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த பிஷ்ணுராம் மேதி என்பவர். இன்றைய இளைஞர்களுக்குத் தெரியாது இந்த வரலாறு.

வேலூர் சிறைச்சாலையை அந்த ஆளுநர் பார்வையிடுகிறார். 17 வயதுள்ள ஓர் இளைஞன், அங்கே இருக்கிறான். அந்த இளைஞனை அழைத்து, ‘‘என்ன குற்றம் செய்துவிட்டு இங்கே வந்திருக்கிறாய், இந்த சிறிய வயதில்?’’ என்று.

அந்த இளைஞன் பதில் சொல்கிறார், ‘‘அரசிய லமைப்புச் சட்டத்தைக் கொளுத்தியதற்காக ஓராண்டு தண்டனை பெற்று வந்திருக்கிறேன்’’ என்று.

அதைக் கேட்ட ஆளுநர் ஆச்சரியப்பட்டார்.

‘‘சரி, யாரோ சொல்லி, நீ தவறான செயலைச் செய்திருக்கிறாய். உன்னை மன்னித்து வெளியே விடுகி றேன். உனக்குச் சிறிய வயது என்பதால். இனிமேல் ஒழுங்காக இருப்பாயா?’’ என்று.

அந்த இளைஞனின் பெயர் பெரியசாமி. வேலூர் சிறைச்சாலையில் அந்த நிகழ்வு  நடக்கிறது.

‘‘என்னுடைய தலைவர், மீண்டும் அரசியலமைப்புச் சட்டத்தைக் கொளுத்தச் சொன்னால் கொளுத்துவேன்- சிறைக்கும் வருவேன்!’’

அந்த இளைஞன், ‘‘என்னை வெளியில் விட்டால், நான் போகிறேன். ஆனால், என்னுடைய தலைவர், மீண்டும் அரசியல் சட்டத்தைக் கொளுத்தச் சொன்னால், மீண்டும் கொளுத்திவிட்டு சிறைச்சாலைக்கு வருவேன்’’ என்று சொன்னார்.

ஆச்சரியப்பட்ட ஆளுநர் பிஷ்ணுராம் மேதி!

அதைக் கேட்ட அந்த ஆளுநர், ‘‘இப்படி ஓர் இயக்கமா? இப்படி ஒரு தலைவரா? இப்படிப்பட்ட தோழர்களா? ஆச்சரியப்பட்டார்.

நம்முடைய இயக்கத் தொண்டர்கள்,  தங்களுடைய தொண்டை வியாபாரம் செய்ததில்லை. தொண்டை, வணிகமாக்கியதில்லை.

‘அறவிலை வணிகன்’ என்று ஒரு வார்த்தை இருக்கிறது இலக்கியத்தில்.

அறத்தைக்கூட  விலைக்குக் கொள்வான். ஆனால், தொண்டறம் என்பதற்கு எந்த விலையும் ஈடாகாது.

தி.மு.க.வை அழிக்கவேண்டும் என்று
ஏன் நினைக்கிறார்கள்?

இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்கி றேன், தி.மு.க.வை அழிக்கவேண்டும் என்று ஏன் நினைக்கிறார்கள்? ஏன் தி.மு.க. சாதனை செய்யக்கூடாது என்று நினைக்கிறார்கள்? அதற்காக யார் யாரையோ கூப்பிடுகிறார்கள். எல்லோரையும் பிரித்து வைக்கிறார்கள். அதனுடைய ரகசியத்தைத் தெரிந்துகொள்ளவேண்டும்.

மோடி சொன்ன  தேர்தல் வாக்குறுதிகள் என்னாயிற்று?

தாய்மார்கள் இன்றைக்கு மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.  தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றிவிட்டீர்களா? வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டீர்களா? என்று கேட்கிறார்களே, மோடி சொன்ன  தேர்தல் வாக்குறுதிகள் என்னாயிற்று?

மோடி அவர்களே! ‘‘ஒவ்வொரு குடிமகனின் வங்கிக் கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவோம் என்று சொன்னீர்களே, ஆண்டு ஒன்றிற்கு 2 கோடி பேருக்கு வேலை கொடுப்போம் என்று சொன்னீர்களே’’ அது என்னாயிற்று?

தேர்தல் வாக்குறுதி கொடுத்தவருக்கு மறந்து போகலாம்; அதைக் கேட்டவர்களுக்கும் மறந்து போய்விட்டதே!

‘விஸ்வ குரு’ என்று தன்னை வர்ணித்துக் கொண்டார். இன்றைக்குத் திருப்பூர் என்ன பாடுபடுகிறது என்று பாருங்கள். மற்ற மற்ற இடங்கள் என்ன பாடுபடுகின்றன என்பதையும் பாருங்கள்.

‘திராவிட மாடல்’ ஆட்சியினுடைய சிறப்பு!

அதேநேரத்தில், தமிழ்நாட்டை நோக்கி, முதலீடுகள் வந்து கொண்டிருக்கின்றன.  ‘திராவிட மாடல்’ ஆட்சி யினுடைய சிறப்பு எப்படிப்பட்டது என்பதை எண்ணிப் பாருங்கள்.

ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியை ஆர்.எஸ்.எஸ். இயக்கு கிறது; பார்ப்பனர்கள் இயக்குகிறார்கள்.

கொலை செய்வதற்கு எப்படி கூலிப்படைகள் தயாராக இருக்கின்றன. சொந்த பிள்ளையை, வளர்த்த பிள்ளையை ஆணவக் கொலை செய்கிறார்கள்.

தேர்தல் அறிக்கையில் சொல்லாததையும்  செய்கிறது ‘திராவிட மாடல்’ ஆட்சி!

திராவிட முன்னேற்றக் கழகம், மக்களால் உருவாக்கப்பட்ட ஓர் எளிமையான இயக்கமாகும். அதனால்தான், இன்றைக்கு எல்லோருக்கும் படிப்பு; எங்கே பார்த்தாலும் கல்லூரிகள்; எங்கே பார்த்தாலும் பல்கலைக் கழகங்கள்!

அதுமட்டுமல்ல, தேர்தல் அறிக்கையில் சொல்லாத தையும்  ‘திராவிட மாடல்’ அரசு செய்துள்ளது. அதுதான் காலைச் சிற்றுண்டித் திட்டம்.

பச்சைத் தமிழர் காமராசர் அவர்கள், மதிய உணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். அதன் தொடர்ச்சியாக, எம்.ஜி.ஆர். அவர்கள், சத்துணவுத் திட்டத்தைக் கொண்டு வந்தார். உண்மையிலேயே சத்துணவு என்று, நம்முடைய கலைஞர் அவர்கள், பிள்ளைகளுக்கு இரண்டு முட்டையைக் கொடுத்தார்.

ஈரோட்டுக் குருகுலத்தில் படித்தவர்களுக்கு…

உடனே குறுக்குச்சால் விட்டார்கள். ‘‘பார்த்தீர்களா, அசைவ உணவு கொடுக்கிறார்; நம்முடைய சைவத்தை அழித்துவிட்டார்’’ என்றார்கள். ஏனென்றால், தி.மு.க. அதைச் செய்யக்கூடாது என்பதற்காக. ஈரோட்டுக் குருகுலத்தில் படித்தவர்களுக்குப் பட்டென்று பதில் சொல்லத் தெரியும்.

உடனே கலைஞர் பதில் சொன்னார், ‘‘அசைவம் சாப்பிடாத குழந்தைகளுக்கு இரண்டு வாழைப்பழம் கொடுக்கப்படும்’’ என்றார். வாழை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு அதைக் கேட்டு மகிழ்ச்சி!

இன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில், பள்ளிகளில் காலைச் சிற்றுண்டித் திட்டம் மிகச் சிறப்பாக நடை பெறுகிறது.

இதற்கு முன்பு வரையில், பெற்றோர் வீட்டில் காலை உணவைத் தயார் செய்திருந்தாலும், பள்ளிகளுக்குச் செல்லும் பிள்ளைகள், நேரமாகிறது, நான் சாப்பிடவில்லை என்று பள்ளிக்குச் சென்று விடுவார்கள். தாய்மார்கள் தட்டைக் கையில் வைத்துக்கொண்டு, ‘சாப்பிட்டுவிட்டுப் போ, சாப்பிட்டு விட்டுப்போ’ என்று விரட்டிக் கொண்டு சொல்வார்கள்.

காலைச் சிற்றுண்டி திட்டத்தால்,
சமத்துவம் வந்தது!

இன்றைக்கு அந்த நிலை இல்லை. பிள்ளைகள் மகிழ்ச்சியாக பள்ளிக்கூடத்திற்கு வருகிறார்கள். அங்கே அனைவருடனும் அமர்ந்து சாப்பிடுகிறார்கள்.

இதில் இன்னொரு தத்துவமும் அடங்கியி ருக்கிறது. பள்ளிக்கூடத்தில் எல்லா மாணவர்களும் அமர்ந்து சாப்பிடுவதால், ஜாதி போயிற்று, மதம் போயிற்று, மூடநம்பிக்கை போயிற்று; அதனால், சமத்துவம் வந்தது!

ஒரு கல்லில் இரண்டு மாங்காய்களை அடிக்கின்ற ஆட்சி, ‘திராவிட மாடல்’ ஆட்சி. இதனை அசைக்க முடியாது உங்களால்.

இதனுடைய வேரைக் கண்டுபிடிக்கிறோம், கண்டு பிடிக்கிறோம் என்று மண்ணைத் தோண்டிக் கொண்டே இருங்கள். அந்த மண் உங்கள் மேல் விழுந்துகொண்டே இருக்கும்.

வேரைத் தேடி, நீங்கள் தோண்டிக் கொண்டே போகப் போக, அந்த மண் உங்கள் மேல் விழுந்தால், உங்களைக் காப்பாற்றுவது யார்?

பெரியார் மண் என்று நாங்கள் சொன்னதினுடைய தத்துவம் என்னவென்றால், வேரைத் தேடி, நீங்கள் தோண்டிக் கொண்டே போகப் போக, அந்த மண் உங்கள் மேல் விழுந்தால், உங்களைக் காப்பாற்றுவது யார்? என்ற கேள்வி மிக முக்கியமாக வரும்.

சுயமரியாதை இயக்கம் என்ன செய்தது என்பது பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். நேரமின்மையால், இன்னொரு பகுதி நிதி வழங்க இருக்கின்ற அந்த  நிகழ்வில் மீதம் உள்ளவற்றை சொல்லலாம். இங்கே மேனாள் அமைச்சரே அதற்கு உத்தரவாதம் கொடுத்திருக்கிறார்.

ஒரு சுவையான நிகழ்வு – நடந்த நிகழ்வை உங்க ளுக்குச் சொல்கிறேன்.

ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி.யினர், தமிழ்நாட்டை எப்படியாவது வளைக்கவேண்டும் என்றும், என்ன விலைக் கொடுத்தாலும் பரவாயில்லை; எவ்வளவு மோசமான கீழிறக்கத்திற்குப் போனாலும் அதனைச் செய்யவேண்டும் என்று நினைக்கக் கூடிய அளவிற்கு அவர்கள் வருவதற்கு என்ன காரணம் தெரியுமா?

‘‘படி, படி, படி’’ என்று சொன்னது திராவிட இயக்க ஆட்சி – படிக்காதே என்கிறது மனுதர்மம்!

மனுதர்மப்படி சூத்திரன் படிக்கக் கூடாது. பெண்கள் படிக்கக் கூடாது. ஒடுக்கப்பட்டவன், தாழ்த்தப்பட்டவன் படிக்கக் கூடாது.

‘‘படி, படி, படி’’ என்று சொன்ன நீதிக்கட்சி ஆட்சி யிலிருந்து, இன்று அதனுடைய மறு உருவமாக இருக்கக்கூடிய ‘திராவிட மாடல்’ ஆட்சி வரைக்கும், ‘‘படிப்பு, படிப்பு, படிப்பு’’ என்பதுதான் எங்கே பார்த்தாலும்.

அதேநேரத்தில், அங்கே என்ன சொல்கிறார்கள்? ‘‘படிக்காதே’’  என்றுதானே!

எதற்கெடுத்தாலும் தேர்வு, தேர்வு, தேர்வா?

5 ஆம் வகுப்பிற்குப் பொதுத் தேர்வு, 8 ஆம் வகுப்பிற்குப் பொதுத் தேர்வு, 11 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு, 12 ஆம் வகுப்பில் பொதுத் தேர்வு. இந்தத் தேர்வுகள் போதாதென்று, நீட் தேர்வு, க்யூட் தேர்வு.

இப்போது ஆசிரியர்களுக்கு டெட் தேர்வு எழுத வேண்டும் என்று சொல்கிறார்கள். முன்பு இருந்தவர்கள் பார்ப்பன ஆசிரியர்கள். இன்றைக்கு இருப்பவர்கள் நம் ஆசிரியர்கள். அதனை ஒழிப்பதற்காக என்ன சொல்கிறார்கள்? 52 வயதில் பணியில் இருக்கின்ற ஆசிரியர்கள் அனைவரும் டெட் தேர்வு எழுதவேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.

நம் நாட்டில் ஆசிரியர்கள்தான், மாணவர்களைத் தேர்வு எழுத  வைப்பார்கள். ஆனால், இன்றைக்கு ஆசிரியர்களையே தேர்வு எழுதவேண்டும் என்று சொல்கிறார்கள் என்றால், அதனுடைய அடிப்படை என்ன?

ஆசிரியர்களாக, திராவிடர்கள், தமிழர்கள் வந்துவிட்டார்கள் என்பதினால்தான்!

ஆசிரியர்களில், பார்ப்பனர் அல்லாதவர்கள் வந்தால், அவர்களை ஒழிக்கவேண்டும். ஆசிரியர்களாக, திராவிடர்கள், தமிழர்கள் வந்துவிட்டார்கள். சூத்திரர்கள் ஆட்சி நடைபெறுகிறது.

அந்த சூத்திர ஆட்சியை ஒழிக்கவேண்டும். ஏனென்றால், மனுதர்மத்தில் எழுதியிருக்கின்றான்.

‘‘சூத்திரன் ராஜாவாக இருக்கும் நாடு; சூத்திரன் ஆளும் நாடு, சேற்றிலே சிக்கிக்கொண்ட ஒரு வண்டி போன்றது. ஆகவே, சூத்திரர்களுடைய ஆட்சியை ஒழிக்க வேண்டும். அரசர்களுடைய வேலை என்னவென்றால், பிராமணர்களைப் பாதுகாப்பதுதான்’’ என்று.

ஆசிரியர் உரை

மனுதர்மத்தைத்தான் பாடத் திட்டமாக வைக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள்!

இதுதான் மனுதர்மம். இந்த மனுதர்மத்தைத்தான் பாடத் திட்டமாக வைக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். இதில் எவ்வளவு ஆபத்து இருக்கிறது என்பதை பெற்றோர்களே  நினைத்துப் பாருங்கள்.

நாங்கள், உங்களுக்காக, எங்களுடைய உழைப்பை வேர்வையாக, ரத்தமாக கொடுக்கிறோம், நண்பர்களே!

ஏன், பெரியார் உலகம்?

குலக்கல்வித் திட்டம் என்று ஆச்சாரியார் கொண்டு வந்த திட்டத்தை, 1954 இல், பச்சைத் தமிழர் காமராசர் ஒழித்தார்.

1954 ஆம் ஆண்டிலிருந்து இன்றைக்கு வரையில் இருந்தால், வயது என்ன?

‘‘இட ஒதுக்கீடு இப்போது எதற்கு?’’ என்று சிலர் புரியாமல் கேட்கிறார்கள்!

இன்றைக்கு நம்முடைய பிள்ளைகளே புரியாமல் கேட்கிறார்கள், ‘‘இட ஒதுக்கீடு இப்போது எதற்கு?’’ என்று.

ஏனென்றால், அவர்கள் இன்றைக்கு அகலமான சாலைகளில்,  மேடு பள்ளம் இல்லாத சாலைகளில் பயணிக்கிறார்கள். முன்பெல்லாம் ரயில்வே கேட்டில் நின்று கொண்டிருந்தோம்.

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சாவூருக்குச் செல்வ தற்காக உரத்தநாடு வழியாக வரவேண்டும் என்றால், மூன்று பெரிய ரவுண்டு இருக்கும். அந்த மூன்று பெரிய ரவுண்டில் பாலம். பல இடங்களில் விபத்து!

உரத்தநாடு சீதா!

எங்கள் இயக்கத்தினுடைய தலைவராக, செயல்வீர ராக இருந்தவர் உரத்தநாடு சீதா அவர்கள். மோட்டார் பைக்கில்தான் அவர் வருவார்.

அந்த சீதா, அந்த ரவுண்டு பாலத்தில் விபத்து ஏற்பட்டு இறந்தார். அப்படி பல பேர் உயிர் துறந்திருக்கிறார்கள்.

இன்றைக்கு அந்த நிலை இல்லை. அந்தப் பாலம் உடைக்கப்பட்டு, மிகச் சீரான பாதை அமைக்கப்பட்டு இருக்கிறது. மிக வேகமாக அந்தப் பாதையில் பயணிக்கி றார்கள்.

இந்தப் பாதையில் பயணிக்கின்ற இன்றைய இளைஞர்களுக்குப் பழைய நிலை தெரியாது அல்லவா!

ஆனால், இப்போது பழைய நிலையைக் கொண்டு வரவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று ஏன் மேலே இருந்து முயற்சி செய்கிறார்கள்? ஆர்.எஸ்.எஸ். என்ற பார்ப்பனியம், ஆரியம் முயற்சி செய்கிறது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும் தோழர்களே!

திராவிட ஆட்சிக்கு அரணாக இருப்பதுதான்  நம்மு டைய கடமை. அதுதான் அய்யாவினுடைய வாக்கியம்.

தி.மு.க. ஆட்சி ஒழிந்தது என்றால், பழசு எல்லாம் மீண்டும் திரும்பி வரும்: தந்தை பெரியார்!

தன்னுடைய இறுதி உரையின்போதுகூட தந்தை பெரியார் சொன்னார். டிசம்பர் 19, 1973 அன்று உரையாற்றும்போது,  ‘‘தி.மு.க. ஆட்சியை ஒழிக்கவேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள். அப்படி தி.மு.க. ஆட்சி ஒழிந்தது என்றால், பழசு எல்லாம் மீண்டும் திரும்பி வரும். இதை நான் சொல்கிறேன், கேட்டால், கேளுங்கள்; இல்லையென்றால், நாசமாய்ப் போங்கள்’’ என்றார்.

98 பேரில், பார்ப்பனர்கள் 25 சதவிகிதத்தினர்!

ஒரு சிறிய வரலாற்றுக் குறிப்பைச் சொல்கிறேன். நாமெல்லாம் பிறக்காத காலத்தில் நடைபெற்ற நிகழ்வு. 1920 ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று நீதிக்கட்சி ஆட்சிக்கு வந்தது. சட்டப்பேரவை உறுப்பி னர்களின் எண்ணிக்கை 98. ஆந்திரா, கருநாடகா பகுதிகளையெல்லாம் சேர்த்துத்தான். 98 பேரில், பார்ப்பனர்கள் 25 சதவிகிதத்தினர்.

சட்டப்பேரவைத் தலைவர் பார்ப்பனர்கள்தான். பல்கலைக் கழகத் துணை வேந்தர்கள் அவர்கள்தான்.

அதைப் படிப்படியாக மாற்றியது பெரியாருடைய இயக்கம், சுயமரியாதை இயக்கம்தான். அதற்குப் பிறகு தகுதியுள்ள ஆட்களாக நம்மாட்கள் வந்தார்கள்.

ஆளுநரைக் கண்டித்த தந்தை பெரியார்!

உஸ்மான் என்கின்ற ஓர் ஆளுநர், அவரைப் பெரியார் கண்டிக்கின்றார். நீதிக்கட்சியிலிருந்து போனவர் அவர்.

‘‘இஞ்சினியர் பட்டியலைப் போட்டிருக்கிறீர்களே, அதில் ஓர் ஆள்கூட எங்கள் ஆள் இல்லையே! எல்லோ ரையும் பார்ப்பனர்களாகவே போட்டிருக்கிறீர்களே’’ என்று கோபப்பட்டு எழுதுகிறார்.

ஆளுநரின் விளக்கம்!

அந்த ஆளுநர், பெரியாரிடம் சொல்லுமாறு ஒருவரிடம் சொல்லி அனுப்புகிறார்.

‘‘அய்யா, நான் பட்டியலைப் பார்த்தேன். உங்கள் ஆட்கள் யாரும் இஞ்ஜினியரிங் படிக்கவில்லையே! அந்தப் படிப்பு முடித்து யாரும் இல்லையே! இல்லாத வர்களை எப்படி நான் பட்டியலில் போடுவேன். அவர்கள்தானே படித்திருக்கிறார்கள்; அவர்களைத்தானே போட முடியும்’’ என்று.

அப்போதுதான் பெரியார் சொன்னார். வகுப்புரிமை யைப் பயன்படுத்தினால், நம்மாட்கள் வருவார்கள் என்று.

அதனால், எல்லாவற்றிலும் மாறுதல் ஏற்பட்டது. பச்சைத் தமிழர் காமராசரை முதலமைச்சராக்கினார் தந்தை பெரியார் அவர்கள்.

இந்த வரலாறு பல பேருக்குத் தெரியாது. காங்கிரஸ்கா ரர்களுக்கே தெரியாது.

எதிர்ப்பைப்பற்றி கவலைப்படாதீர்கள் என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள். பெரியாருடைய தொலைநோக்கு என்பது வேறு.

பார்ப்பனரல்லாத அமைச்சரவை!

முதன்முதல், ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின்னால், தமிழ்நாட்டினுடைய அரசியல் வரலாற்றில், பார்ப்பனரல்லாத அமைச்சரவை அமைந்தது. அமைச்சர்கள் 8 பேர், பார்ப்பனரல்லாத அமைச்சர்கள். ஒரு பார்ப்பனர்கூட அமைச்சராக இல்லை.

தி.மு.க.வில் பார்ப்பனர்களுக்கு
இடமே கிடையாது!

அதற்கடுத்தாக 1967 இல் அண்ணா அவர்கள் ஆட்சிக்கு வந்தார். அன்று தொடங்கி இன்றுவரையில், தி.மு.க.வில் பார்ப்பனர்களுக்கு இடமே கிடையாது.

முதலமைச்சர் அண்ணாவிடம் ஒரு கேள்வி கேட்டார்கள், ‘‘உங்கள் அமைச்சரவையில், எல்லோருக்கும் வாய்ப்பு இருக்குமா?’’ என்று.

அதற்கு அண்ணா அவர்கள், ‘‘எல்லோருக்கும் வாய்ப்பு இருக்கும்’’ என்று பதில் சொல்கிறார்.

‘‘எல்லா சமூகத்தினருக்கும் வாய்ப்பு இருக்குமா? பார்ப்பனர்களை அமைச்சரவையில் சேர்ப்பீர்களா?’’ என்று கேள்வி கேட்டார்கள்.

உடனே அண்ணா அவர்கள், ‘‘எங்களை நம்பி அவர்கள் யாரும் எம்.எல்.ஏ. ஆகவில்லை’’ என்றார்.

அதை இன்றுவரையில் காப்பாற்றி வருகி றார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதிகளாக இருந்த இருவர், ஓய்வு பெற்றவர்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் கேட்டதாக உறுப்பினர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

234 சட்டப்பேரவை உறுப்பினர்களில், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்கூடபார்ப்பனர் இல்லையே!

‘‘தமிழ்நாட்டைப்பற்றி எங்களுக்குப் புரியவேண்டிய விஷயம் ஒன்று இருக்கிறது. 234 சட்டப்பேரவை உறுப்பினர்களில், 39 நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவர்கூட ‘பிராமணர்’ இல்லையே! அதற்கு என்ன காரணம்? சரி, பெரியார் இயக்கம் என்பது எவ்வளவு சக்தி வாய்ந்தது என்பது எங்களுக்குப் புரியாமல் இல்லை.

சரி, தி.மு.க.வை விடுங்கள்; மீதிக் கட்சிகள், எதிர்க்கட்சிகளில் கூட பார்ப்பனர்கள் யாரும் இல்லையே!’’ என்று வியப்போடு கேட்டுள்ளார்கள்.

சட்டமன்றக் கட்சித்  தலைவராக நம்மாட்களைத்தானே தேடிப் பிடிக்கிறார்கள் பிஜேபி உள்பட!

சட்டமன்றக் கட்சித் தலைவராக அமர்த்துவதற்கு நம்மாட்களைத்தானே தேடிப் பிடிக்கிறார்கள், பிஜேபி உள்பட. அதுதானே வரலாறு.

இந்த உணர்வில்தான் சுயமரியாதை இயக்கத்தி னுடைய வெற்றி அடங்கியிருக்கிறது!

34 பேரின் முதுகைத் தடவிப் பார்த்தால், வெறும் முதுகாக இருக்கிறது; குறுக்கே நூலே இல்லை!

அதேபோன்று நண்பர்களே, 234 இடங்களில், கலைஞர் காலத்தில்கூட, காமராசர் காலத்தில்கூட 100-க்கு 3 சதவிகிதம் இருந்தார்கள். ஆனால், இன்றைக்கு நிலைமை மாறி, மாறி  234 இல் ஒரு பார்ப்பனர்கூட இல்லை. 234 பேரின் முதுகைத் தடவிப் பார்த்தால், வெறும் முதுகாக இருக்கிறது. குறுக்கே நூலே இல்லை.

இதற்காகத்தான், இந்த ஆட்சி ஒழியவேண்டும் என்று அவர்கள் பாடுபடுவதினுடைய ரகசியம் இதுதான்.

நம்முடைய தோழர்களை நினைத்துப் பாருங்கள்; கட்சியை மறந்துவிடுங்கள்.

இந்த இனத்தினுடைய எதிர்காலத்தினுடைய வாழ்வு அதில் இருக்கிறது. நாம் அவர்களைப் பழிவாங்கவில்லை.

மூன்று சதவிகிதமாக இருக்கின்றவர்கள், 25 சதவிகிதமாக வந்தால், எட்டு மடங்கு அனுபவித்தார்கள்.

உத்தியோகம் உங்களுடையது. அய்.ஏ.எஸ். பார்ப்பனர்களுடையது; அய்.பி.எஸ். அவர்களுடையது. அய்.சி.எஸ். அவர்களுடையது. வக்கீல்கள் எல்லாம் அங்கே என்கிற நிலைமை இப்போது இல்லை.

மனுதர்மத்தை ஒழித்து, மனிதநேயத்தை உருவாக்கும் திராவிட இயக்கம்!

இதையெல்லாம் பார்த்தவுடன்தான், மனு தர்மத்தை ஆட்சிச் சட்டமாகவே கொண்டு வரத் துடிக்கின்றார்கள்.

எனவேதான் மனுதர்மத்தை ஒழித்துவிட்டு. மனிதநேயத்தை உருவாக்கக் கூடிய இயக்கம் திராவிட இயக்கம்.

எனவேதான், அதை அழிக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்.

எனவே, பெற்றோர்களே, தாய்மார்களே, பெரியா ருக்காக அல்ல – மருந்து சாப்பிடவேண்டும் என்று டாக்டர் சொன்னால், உடனே நீங்கள் மருந்துக் கடைக்குச் சென்று அந்த மருந்தை வாங்குகிறீர்கள். ஏன் மருந்து வாங்குகிறீர்கள்? டாக்டர் கோபித்துக் கொள்வார் என்பதற்காகவா? மருந்துக் கடைக்காரருக்கு வியாபாரம் ஆகவேண்டும் என்பதற்காகவா? இல்லை, நம்முடைய நோய்க்காக.

பெரியார் என்ற மாமருந்து!

அதுபோன்று, பெரியார் என்ற மருந்து இருக்கிறதே, சுயமரியாதை இயக்கம் என்கின்ற மருந்து இருக்கிறதே, திராவிட இயக்கம் என்ற மருந்து இருக்கிறதே, அது நம்முடைய நோய்க்கு – ஜாதி நோய்க்கு, மூடநம்பிக்கை என்ற நோய்க்கு, தீண்டாமை ஒழிப்புக்கு உரிய மருந்து!

‘‘பெரியாருக்கு என்னால் அரசு மரியாதையைத்தான் கொடுக்க முடிந்தது. ஆனால், அவருடைய நெஞ்சில் தைத்த முள்ளை எடுக்க முடியவில்லையே! அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகராக்க முடியவில்லையே’’ என்று நம்முடைய கலைஞர் அவர்கள் ஆதங்கப்பட்டார்.

பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய பெருமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்!

ஆட்சிக்கு வந்தவுடன், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை அகற்றிய பெருமை, இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களையே சாரும்.

பள்ளிக்கூடம் கட்டினால் எல்லோரும் வரவேற்பார்கள். கோவில் நிதியில் ஏன் கல்லூரி நடத்துகிறீர்கள் என்று கேட்கிறார்கள்.

செய்வதற்குத் தி.மு.க. – செய்யச் சொல்வதற்குத் தி.க. – தாய்க்கழகம்!

ஆகவே, இப்படிப்பட்ட ஒரு பெரிய மாறுதல் – சமுதாய சிந்தனையில் மாற்றம். ஒருவர் செய்வதற்குத் தி.மு.க. – செய்யச் சொல்வதற்குத் தி.க. – தாய்க்கழகம் என்று முன்னோட்டமாக ஓடிக்கொண்டிருக்கின்ற இந்த இரட்டைக் குழல் துப்பாக்கிகள் மட்டுமல்ல – இதோடு பல குழல்கள் இணைந்திருக்கின்றன. மூன்றாவது குழல் போன்று, நான்காவது குழல்கள் என்று ஒற்றுமையாக இருக்கின்றார்கள்.

உங்களால் வேரைக் கண்டுபிடிக்க முடியாது!

ஆகவே, உங்களால் அசைக்க முடியாது. வேரைத் தேடி உங்களால் வர முடியாது. வெறும் இலை களைத்தான் எட்ட முடியுமே தவிர, உங்களால் வேரைக் கண்டுபிடிக்க முடியாது.

இலைகள் ஆடுகின்றன; ஆனால், வேர்கள் மிகப் பத்திரமாக இருக்கின்றன. அதைப் புரிந்துகொள்ளுங்கள்.

வெற்றி நமதே!

பெரியார் உலகமயமாகி இருக்கிறார்; உலகம் பெரியார் மயமாகி இருக்கிறது!

மீண்டும் வடக்கு நிதியளிப்புக்கு வருவேன். தோழர்கள் செய்து முடிப்பார்கள், பெறுவேன்.  பெரியார் உலகமயமாகி இருக்கிறார்; உலகம் பெரியார் மயமாகி இருக்கிறது.

நாம், மானமும் அறிவும் உள்ள மக்களாக இருக்க வேண்டும் என்கின்ற பெரியார் விருப்பப்படி நடக்கவேண்டும் என்று சொல்லி விடைபெறுகிறேன்.

நன்கொடையாளர்களுக்கு நன்றி! நன்றி!!

ஏற்பாடு செய்த தோழர்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றி!

உழைப்புக்கு நன்றி!

ஒத்துழைப்புக்கு நன்றி!

நன்கொடையாளர்களுக்கு நன்றி! நன்றி!!

வாழ்க பெரியார்!

நன்றி, வணக்கம்!

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

 

 

 


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *