ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் திறக்கப்படுவது
வெறும் பெரியார் படமல்ல!
சென்னை, செப்.6- எவ்வளவு நல்ல தத்துவமானாலும் அதை முன்னெடுக்கும் தலைமை தகுதிவாய்ந்ததாய் அமைந்தால் மட்டுமே அந்தத் தத்துவம் வெற்றி பெறும். அப்படி ஒரு தத்துவத்தையும் தலை மையையும் காலம் பெரியாரின் வடிவத்தில் தமிழர்களுக்கு வழங்கியது.
அந்தக் காலக்கொடையை அதிகாரத்தில் அமர வைத்தார் அண்ணா. அவருக்குப்பின் அந்தத் தத்துவத்தை தளராமல் அரியணையில் அமர வைத்தார் கலைஞர்.
எம்.ஜி.ஆர். என்ற திரைபிம்பத்தை ஏந்தி அந்தத் தத்துவத்தை இன எதிரிகள் சிதைக்க முயன்றபோது ஆட்சிக் கட்டிலை இழந்தும் காவல் அரணாய் காத்துநின்றவர் அவர்.அதிகாரத்திற்கு வந்த போதெல்லாம் தத்துவத்தை அரியணை ஏற்றிய வரும் அவரே.
அவருக்குப்பின் தத்துவம் என்னாகும்? கவலை கொண்ட வர்கள் இருக்கத்தான் செய்தார்கள்; உலகெங்கும் நூறாண் டுகள் ஒரு தத்துவம் கோலோச்சியது இல்லை என்பதால்! கவலை கொண்டவர்கள் இன்று கர்வம் கொள்கிறார்கள்.
தத்துவம் தகுதிமிக்க தலைவனின் குடையின் கீழ் பத்திரமாய் இருப்பதால்! அதற்கு தமிழ் எல்லைக்குள் அண்ணாவால் அரியாசனம்; இந்திய எல்லைக்குள் கலைஞரால் சரியாசனம். முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் மாமனி தரால் அது உலகமயமாகி இன்று உச்சம் தொட்டது. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் திறக்கப்படுவது வெறும் படமல்ல; சிரஞ்சீவித் தத்துவம் சீரிளமைத் தலைமையால் உலகாளப் போவதற்கான முன்னூட்டத் தடம்!
வாழ்க நீ எம்மான் இவ்வையத்து நாட்டிலெல்லாம்.