மேலூர்,மே31 – மதுரை மாவட்டம், மேலூர் அருகே புலிப்பட்டியில் உள்ள புலி மலையில், 2,100 ஆண்டுகளுக்கு முந் தைய கற்கால மனிதர்கள் வரைந்த சிவப்புப் பாறை ஓவியங்களை, தொல் லியல் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.
இதுகுறித்து, மதுரை கோவில் கட்டடக்கலை சிற்பத்துறை ஆய்வாளர் தேவி கூறியதாவது:
புலி மலை பாறையில் மனித உருவங்கள், விலங் குகள், குறியீடுகள் என, 100க்கும் மேற்பட்ட சிகப்பு நிற ஓவியங்கள் உள்ளன.
இது, கற்காலத்தை சேர்ந்தவை என, கருதப்படுகிறது. மதுரை யில் ஆறு இடங்களில் இதுபோன்ற ஓவியங்கள் கண்டறியப்பட்டன.
தமிழ்நாட்டை பொறுத்தவரை, சிவப்பு பாறை ஓவியங்களை 5,000 ஆண்டுகள் பழை மையானது என கருதப் படுகிறது.
இந்நிலையில், இப் பாறை ஓவியத்தின் காலம், 2,100 ஆண்டு களுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பு உள்ளது.
-இவ்வாறு அவர் கூறினார்.