5.9.2025
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* உள்ளாட்சித் தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் இருந்து வாக்குச் சீட்டுக்கு மாறுதல்: கருநாடக அமைச்சரவை மாநில தேர்தல் ஆணையத்திடம் பரிந்துரை
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தெலங்கானா மாதிரியில் ஓபிசி ஒதுக்கீட்டை 27%இல் இருந்து 42% ஆக உயர்த்துமாறு மகாராட்டிரா காங் கிரஸ் மகாராட்டிரா முதலமைச்சர் பட்னாவிஸ்க்கு வலியுறுத்தல்.
தி ஹிந்து:
* தொழிலாளர் கட்டணங்களுக்கான (வேலை வேலை) ஜிஎஸ்டி விகிதம் 12%இல் இருந்து 18% ஆக உயர்த்தப்பட்டுள்ளது, இது குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களை (எம்எஸ்எம்இ) கடுமையாக பாதிக்கும் என திருப்பூர் மாவட்ட குறு மற்றும் குடிசை தொழில் முனைவோர் சங்கத்தின் தலைவர் குமுறல்.
* ஜிஎஸ்டி வரி புதிய மாற்றங்கள் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளுக்கு மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், காங்கிரஸ் வலியுறுத்தல்.
தி டெலிகிராப்:
* ‘ஒரு தேசம், 9 வரிகள்’:”ஜிஎஸ்டி வரி விகிதங்களை எளிமையாக்க 8 ஆண்டுகளுக்கு மேலாக காங்கிரஸ் போராடியது. ஒரே நாடு, ஒரே வரி என்று சொன்ன மோடி அரசு, மாறாக 9 வகையான வரிகளை அறிமுகம் செய்தது. பிரதமர் மோடியின் அரசின் 8 ஆண்டுகால தூக்கம், தற்போது தான் தெளிந்துள்ளது: மல்லிகார்ஜுன கார்கே கருத்து.
* “இங்கே என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள இந்திய மக்களுக்கு நான் இதைச் சொல்வேன். இந்திய மக்களின் இழப்பில் பார்ப்பனர்கள் லாபம் ஈட்ட நீங்கள் தூண்டி விட்டீர்கள், அதை நிறுத்த நாங்கள் விரும்புகிறோம்” என்ற அதிபர் டொனால்ட் டிரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ பேச்சு; இப்படியா பேசுவது, அமெரிக்க ஹிந்துத்வா அமைப்புகள் ஒப்பாரி.
– குடந்தை கருணா