ஓவிய சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு

1 Min Read

சென்னை, செப்.4 தமிழ்நாடு அரசு நேற்று (3.8.2025) வெளியிட்ட செய்திக்குறிப்பு: அரசு அருங்காட்சியக வளாகத்தில் செப்டம்பர் மாதம் 3 நாட்களுக்கு ஓவியச் சந்தை திட்டத்தை செயல்படுத்த கலை பண்பாட்டுத்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது., இதில் தமிழகத்தைச் சேர்ந்த ஓவிய, சிற்பக் கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பப்படிவத்தை கலை பண்பாட்டுத் துறையின் இணையதளத்தில் (www.artandcuture.tn.gov.in) (v.in)பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைப் பத்தை, இயக்குநர் செப். 15-ஆம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

 

ஆதிதிராவிடர், பழங்குடி இளைஞர்களுக்கு ஜெர்மன் மொழி தேர்வுக்கு இலவச பயிற்சி

தாட்கோ நிறுவனம் அறிவிப்பு

தமிழ்நாடு

சென்னை, செப்.4 தாட்கோ (TAHDCO) வெளியிட்ட ஜெர்மன் மொழி தேர்வு பயிற்சி குறித்த அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

பயிற்சி பெறுபவர்கள்: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரைச் சார்ந்தவர்கள், பி.எஸ்.சி நர்சிங், மருத்துவ  டிப்ளமோ, பி.இ. (மெக்கானிக்கல், பயோ மெடிக்கல், மின் மற்றும் மின்னணு), பி.டெக். (தகவல் தொழில்நுட்பம்) போன்ற படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர்கள்.

தகுதி: 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்குள் இருக்க வேண்டும்.

பயிற்சி மற்றும் வேலைவாய்ப்பு: 9 மாத கால பயிற்சி, பயிற்சி முடித்தவுடன் ஜெர்மனியில் ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சம் வரை மாத ஊதியத்துடன் வேலைவாய்ப்பு. விடுதியில் தங்கி படிப்பதற்கான செலவை தாட்கோ ஏற்கும்.

விண்ணப்பிக்கும் முறை: www.tahdco.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *