‘விடுதலை’யைப் பாராட்டிய இந்து என்.ராம்

1 Min Read

அரசியல்

நேற்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய “தி ஹிந்து”ஆங்கில  ஏட்டின் மேனாள் ஆசிரியர் என்.ராம்  செங்கோல் வழங்கப்பட்ட செய்தி தொடர்பான உண்மைச் செய்திகளை எடுத்து வைத்துப் பேசினார். அப்போது 1947-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 அன்று திராவிட நாடு ஏட்டில் வெளியிட்ட அறிஞர் அண்ணாவின் “செங்கோல் – ஒரு வேண்டுகோள்” என்ற தலைப்பிலான கட்டுரையின் தமிழ் வடிவத்தையும், அதன் ஆங்கில மொழிபெயர்ப்பினையும் (விடுதலையில் வெளிவந்ததை எடுத்து தி வயர் ஆங்கில இணையதளத்தில் கவிதா முரளிதரனும், தி அய்டம் இணையதளத்தில் மூத்த இதழாளர் ஆர்.விஜயசங்கரும் மொழிபெயர்த்துள்ளனர்) எடுத்துக் காட்டிப் பேசினார்.  அக் கட்டுரையை அண்ணாவின் உயரிய மொழி நடையுடன் கூடிய Brilliant piece of Journalism என்றும், Literary Journalism  என்றும் புகழ்ந்துரைத்த என்.ராம், இதை சரியான நேரத்தில் நினைவுகூர்ந்து பதிப்பித்த விடுதலை இதழையும் பாராட்டிப் பேசினார்.   “24 ஆகஸ்ட் 1947 திராவிட நாடு பத்திரிகையில் வந்துள்ளது. விடுதலையை பாராட்டணும். இன்னிக்கு மறந்திருப்பார்கள் எல்லோரும் – அன்றைக்கு எழுதியதை! விடுதலையில் அதை நினைவு வைத்து, இப்போது எடுத்துப் போட்டதால் தான் நமக்கு இந்த விசயமெல்லாம் தெரிந்தது. இல்லையென்றால் தெரிந்திருக்காது. இப்படி தொடர்ந்து சங்கிலித் தொடர் போல நிகழ்வுகள் நடந்த்தால் தான் இன்று உண்மை தெரிந்துள்ளது” என்று தெரிவித்தார்.

பின் குறிப்பு: இன்றைய ஆங்கில ஹிந்து ஏட்டில் வெளிவந்துள்ள ஹிந்து என்.ராம் அவர்களின் பேட்டி தொடர்பான செய்தியில் ‘விடுதலை’ பற்றிய பதிவு இடம் பெறவில்லை.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *