அறிவியல் துளிகள்

1 Min Read
  1. பூமியிலிருந்து மிக தொலைவில் அமைந்திருக்கும் கருந்துளையை, அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். ‘லிட்டில் ரெட் டாட்’ என்று அழைக்கப்படும் கேலக்ஸியில், அடர்த்தியான சிவப்பு மேகங்கள் சூழ்ந்த நிலையில் இந்தக் கருந்துளை உள்ளது.
  2. தண்ணீரில் மூழ்காமல் நடக்கும் பூச்சிகளை நாம் பார்த்திருக்கிறோம். அவற்றை முன்மாதிரியாக கொண்டு நீரில் நடக்கும் ரோபோ ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 8 செ.மீ., நீளமும், 10 செ.மீ., அகலமும், 1.5 செ.மீ., உயரமும் கொண்ட இந்த ரோபோவுக்கு, ‘ரகோபோட்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.
  3. அதிகமான மரங்களை நடுவது பூமிக்கு நல்லது. அமெரிக்காவைச் சேர்ந்த ரிவர்சைட் பல்கலை மேற்கொண்ட ஆய்வில், பூமியின் மற்ற பகுதிகளில் மரம் நடுவதை விட, வெப்ப மண்டல பகுதிகளில் மரம் நடுவதே மிக நல்ல பலன்களை தரும் என்று தெரிய வந்துள்ளது.
  4. நம் உடல் செல்களில் உள்ள குரோமோசோம்களில், ‘டெலமீர்ஸ்’ எனும் பாதுகாப்பு கவசம் இருக்கும். வயதாகும் போது இவை சிதைவதால் பல நோய்கள் உருவாகின்றன. டெலமீர்ஸை காக்கும் ஆற்றல், ‘வைட்டமின் டி’ சத்தில் உள்ளதாக சமீபத்திய ஆய்வு தெரிவிக்கிறது.
  5. பீட்ரூட் சாறு குடிப்பதால் வாயில் உள்ள நல்ல பாக்டீரியாக்கள் துாண்டப்பட்டு ரத்த அழுத்தம் குறையும் என்று, இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த எக்ஸிடர் பல்கலை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *