குய்சோவ், சீன, செப். 4- சீனாவில் உள்ள சுற்றுலாத்தளம் ஒன்றில் 12 வயதுச் சிறுவன் ஆற்று வெள்ளத்தில் சிக்கியபோது, அவனை காப்பாற்ற தங்களது உயிரைப் பணயம் வைத்து மனிதச் சங்கிலி அமைத்த சுற்றுலாப் பயணிகளின் வீரச் செயல், இணையத்தில் அனைவராலும் பாராட் டப்பட்டு வருகிறது.
கடந்த மாதம் (ஆகஸ்ட்) 24 ஆம் தேதி, சீனாவின் குய்சோவ் மாகாணத்தில் இந்த நெகிழ்ச்சியான சம்பவம் நடைபெற்றது. ஆற்றின் அருகே விளையாடிக் கொண்டிருந்த சிறுவன், திடீரென ஏற்பட்ட வெள் ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு, இரு பாறைகளுக்கு இடையில் சிக்கிக் கொண்டான். உதவி கேட்டு அவன் அலறிய சத்தம் கேட்டு, அருகிலிருந்த சுற்றுலாப் பயணிகள் உடனடியாக அங்கு ஓடிவந்தனர்.
உடனே, துணிச்சல் மிக்க சிலர், தங்கள் உயிரைப் பற்றி கவலைப் படாமல் ஆற்றுக்குள் இறங்கி, தங்கள் உடல்களால் மனிதச் சங்கிலி அமைத்து, நீரின் வேகத்தைக் கட்டுப் படுத்தினர். அவர்கள் கயிற்றைப் பயன்படுத்திச் சிறுவனைக் காப்பாற்ற முயன்றும் அது தோல்வி யடைந்தது. மேலும், மழைக்கான அறிகுறிகள் தெரிந்ததால், ஆற்றில் நீர்மட்டம் உயரக்கூடும் என்ற அச்சமும் நிலவியது.
இந்த இக்கட்டான நிலையில், பொதுமக்களில் ஒருவர் ஆற்றுக்குள் இறங்கி, மிகவும் போராடி சிறுவனைப் பாறைகளுக்கு இடையில் இருந்து வெளியேற்றினார். பின்னர், அங்கிருந்த மற்றொருவர் சிறுவனை விரைவாகப் பிடித்து கரைக்கு கொண்டு வந்தார். சுமார் 20 நிமிட போராட்டத்திற்குப் பிறகு, அந்தச் சிறுவன் பத்திரமாக மீட்கப்பட்டான்.
தன்னலமற்று, ஒரு சிறுவனின் உயிரைக் காப்பாற்றிய அந்த சுற்று லாப் பயணிகளின் வீரதீரச் செயலை இணையவாசிகள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இவர்களின் செயல், மனித நேயம் இன்னும் உயிருடன் இருக்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது.