சூரிய ஒளியிலிருந்து மின்சாரம் தயாரிக்கும் தெர்மோஎலக்ட்ரிக் ஜெனரேட்டர்கள், இதுவரை மிகவும் குறைந்த செயல்திறன் கொண்டவையாகவே இருந்தன. அதனால், அவற்றின் பயன்பாடு பெரிய அளவில் இல்லை.
ஆனால், ரோசெஸ்டர் பல்கலை. ஆராய்ச்சியா ளர்களின் சமீபத்திய கண்டு பிடிப்பின் வாயிலாக, இதன் செயல் திறனை 15 மடங்கு அதிகரித்துள்ளனர்.
அவர்கள், வழக்கமாக ஆராயப்படும் சூரிய மின் பலகையின் குறைக்கடத்திப் பொருட்களில் கவனம் செலுத்தாமல், அதன் மேல்தளத்தில் உள்ள உலோகத் தகடுகளிலும், வெப்பப் பரிமாற்றத்திலும் கவனம் செலுத்தினர்.
‘பெம்டோசெகண்ட் லேசர்’ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, டங்ஸ்டன் உலோகத் தகடை வெப்பத்தை அதிகமாக உறிஞ்சும் கருப்பு உலோகமாக மாற்றினர்.
இது சூரிய ஒளியை ஒரு நுரைப்பஞ்சுபோல் உறிஞ்சி, வெப்பமாக மாற்றுகிறது. மேலும், இந்த கருப்பு உலோகத்தின் மீது ஒரு பிளாஸ்டிக் பாதுகாப்பு உறையைப் பொருத்தியதால், வெப்பம் வெளியே கசிவதைத் தடுக்க முடிந்தது. இதன் வாயிலாக வெப்பம் உள்ளேயே தங்கி, மின்சாரமாக மாற்றப்படுகிறது.
இந்தக் கண்டுபிடிப்பு, தெர்மோ எ லக்ட்ரிக் ஜெனரேட்டர்களை வருங்கால மின்னணு சாதனங்களின் தேவைகளுக்கு ஏற்றவையாக மாற்றக்கூடும்.
குறிப்பாக, கைகளில் அணியக்கூடிய கருவிகள், சிறிய உணரிகள் போன்றவற்றில் இது மிகச் சிறப்பாகப் பயன்படும்.