பீஜிங், செப். 04- தனது செல்லப் பூனைகளுக்காக ஒரு சீன இளைஞர், கையால் செய்யப்பட்ட ஒரு சிறிய நிலத்தடி ரயில் நிலையத்தை உருவாக்கி இணையவாசிகளை வியப் பில் ஆழ்த்தியுள்ளார்.இந்த அசத்தல் படைப் பைக் காண 100 மில்லி யனுக்கும் அதிகமானோர் ஆர்வத்துடன் பார்த்துள்ளனர்.
சீனாவைச் சேர்ந்த ஜிங் (Xing) என்ற இளைஞர், தனது பூனைகளுக்காக ஒரு சிறிய நிலத்தடி ரயில் நிலையத்தை வடிவமைக்க நான்கு மாதங்கள் செலவிட்டார். இந்த மினியேச்சர் ரயில் நிலையத்தில், உண்மையான ரயில் நிலையத்தைப் போலவே, பாதுகாப்பு கதவுகள், மின்படிக்கட்டுகள், மற்றும் ஒரு தடத்தில் சீராக நகரும் ரயில் போன்ற நுட்பமான அம்சங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த படைப்பு செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டதாக சில இணையவாசிகள் சந்தேகித்தனர். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ஜிங் தனது படைப்பை உருவாக்கும் செயல்முறையை விளக்கும் ஒரு காட்சிப்பதிவை வெளியிட்டார். அதில், ஒவ்வொரு சிறு பகுதியையும் அவர் எவ்வளவு சிரமப்பட்டு வடிவமைத்தார் என்பதை அவர் விளக்கினார்.
தற்போது, ஜிங் தனது திட்டத்தை மேலும் விரிவுபடுத்தி, திரையரங்கம் மற்றும் பேரங்காடி போன்ற இடங்களைச் சேர்த்து, பூனைகளுக்கான ஒரு முழு நகரத்தையே கட்டமைத்து வருகிறார். அவரது நுட்பமான மற்றும் தனித்துவமான இந்த முயற்சி, இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது.