கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள்

2 Min Read

4.9.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* மத வெறுப்பு பேசிய ஹிந்து முன்னணி பிரமுகருக்கு நீதிமன்றம் வினோத தண்டனை; அரசியலமைப்புச் சட்ட முகப்புரையை பத்து தடவை எழுத உத்தரவு.

* கடல்சார், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் விண்வெளி ஆகிய நிறுவனங்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் லண்டனில் புரிந்துணர்வு ஒப்பந்தம்,

*நீலகிரி தேயிலை தோட்டத் தொழிலாளர் நல அமைப்புகள் ஒன்றிய அமைச்சர் முருகனுக்கு எதிராக புகார்; தங்கள் அமைப்புகளை ஒன்றிய அரசிடம் பேசுவதற்கு ஏற்பாடு செய்யவில்லை என குற்றச்சாட்டு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறையும். ஜிஎஸ்டி சீர்திருத்த நடவடிக்கைக்கு பின்பான வரி குறைப்பு செப்டம்பர் 22ஆம் தேதி முதல் அமலாகும் என ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* வாக்காளர் பெயர்களை மீட்டெடுக்கவும், பீகார் தேர்தலுக்கு தயாராகவும் ஆர்ஜேடி நாடாளுமன்ற, சட்டமன்ற, சட்டமேலவை உறுப்பினர்கள், மாவட்டக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தேஜஸ்வி அறிவுறுத்தல்.

தி இந்து:

* மசோதாக்கள் மீது ஆளுநர்கள் ‘உடனடியாக’ நடவடிக்கை எடுக்க வேண்டும், மாநிலங்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் வாதம்.

* மராத்தா இட ஒதுக்கீடு கோரி ஓபிசி தலைவர்கள் போராட்டங்கள் நடத்தப் போவதாக மிரட்டல்; நீதிமன்றத்தை அணுக அமைச்சர் சாகன் புஜ்பால் திட்டம்.

* பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அமமுக வெளியேறுவதாக டி.டி.வி. தினகரன் அறிவிப்பு. ஒ.பன்னீர்செல்வத்தை தொடர்ந்து டி.டி.வி.தினகரனும், என்.டி.ஏ. கூட்டணியில் இருந்து வெளியேறினார். துரோகம் தலைவிரித்தாடுவதாகவும் காட்டுமன்னார்கோவிலில் டி.டி.வி. தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தி டெலிகிராப்:

* சட்டமன்றத்தால் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்களை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவேற்றத் தவறினால், குடியரசுத் தலைவர் அல்லது ஆளுநர்கள் மீது “அவமதிப்பு” வழக்கு தொடர முடியுமா என்று உச்ச நீதிமன்றம் கேள்வி. காலக்கெடு கடைப்பிடிக்கப்படாத சந்தர்ப்பங்களில், “அனுமதி அளிக்கப்பட்டது” என்ற கோட்பாடு பொருந்தும் என மூத்த வழக்குரைஞர் அபிஷேக் பதில்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* மசோதாக்களின் தலைவிதியை தீர்மானிக்க ஆளுநர்களுக்கு விருப்புரிமை வழங்குவது மாநிலங்களின் சட்டமன்ற செயல்பாடுகளை பாதிக்கும் என்று மேற்கு வங்கம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வாதம்.

 – குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *