சென்னை, செப. 4 56 ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வரி விகிதங்கள் குறைக்கப்பட்டதை வரவேற்ற மேனாள் ஒன்றிய நிதி அமைச்சர் ப.சிதம்பரம், இந்த மாற்றங்களைச் செய்ய அரசுக்கு 8 ஆண்டு கள் தாமதமானது ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
ஜிஎஸ்டி வர விகிதம் மாற்றம்
நேற்று (3.9.2025) டில்லியில் நடை பெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், வரி விகிதங்களை எளிமையாக்கி, இரண்டு அடுக்குகளாகக் குறைக்க ஒப்புதல் வழங்கப்பட்டது. இந்த நடவ டிக்கை மக்களிடையே வரவேற்பைப் பெற்றிருந்தாலும், எதிர்க்கட்சிகள் இந்த மாற்றங்கள் எட்டு ஆண்டுகளுக்குப் பிறகுதான் கொண்டுவரப்பட்டுள்ளன என விமர்சித்துள்ளன.
இதுகுறித்து முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தனது ‘எக்ஸ்’ சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள தாவது:
“ஜிஎஸ்டியின் வடிவமைப்பு மற்றும் அதன் விகிதங்களுக்கு எதிராக நாங்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வந்தோம், ஆனால் எங்கள் கோரிக்கைகள் செவிடன் காதில் விழுந்ததுபோல் இருந்துவிட்டது. ஜிஎஸ்டி விகிதங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள், சேவைகளுக்கான வரி குறைப்பு வரவேற்கத்தக்கது. ஆனால், இது எட்டு ஆண்டுகள் தாமதமாகியுள்ளது. தற்போது இந்த மாற்றங்களைச் செய்ய ஒன்றிய அரசைத் தூண்டியது எது? மெதுவான பொரு ளாதார வளர்ச்சியா? பெருகிவரும் குடும்பக் கடனா? அல்லது குறைந்து வரும் குடும்ப சேமிப்பா?” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அவரது இந்தக் கேள்வி, ஜிஎஸ்டி மாற்றங்களின் நேரம் (timing) குறித்து அரசியல் அரங்கில் ஒரு புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.