டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* அரசமைப்புச்சட்டத்தின்படி ஆராய்ந்து முடிவெடுக்க உச்ச நீதிமன்றத்துக்கு அதிகாரம் இருக்கிறது. இது அடிப்படை கட்டமைப்பு ஆகும், குடியரசுத் தலைவர் அனுப்பிய மனு மீது நீதிபதிகள் கருத்து.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பட்டினிப் போராட்டத்தை முடித்துக் கொண்டார் ஜராங்கே – மராத்தா இடஒதுக்கீடு போராட்டம் வெற்றி என அறிவிப்பு! மராட்டிய மக்களுக்கு குன்பி சாதிச் சான்றிதழ்களை வழங்குவதற்கான அய்தராபாத் வர்த்தமானியை செயல்படுத்துதல், முந்தைய சதாரா சமஸ்தானம் தொடர்பாக இதேபோன்ற முடிவை ஒரு மாதத்துக்குள் எடுத்தல், செப்டம்பர் இறுதிக்குள் மராட்டிய போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறுதல், இட ஒதுக்கீடு போராட்டத்தின் போது உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்குதல் உள்ளிட்ட அரசின் முக்கிய திட்டங்களை ஜராங்கே ஏற்றுக்கொண்டார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பிள்ளையார் சிலை தொடர்பான சண்டை: உத்தரப் பிரதேசத்தின் அலிகார் வயல்களில் ஒரு சட்டவிரோத ஆயுத தொழிற்சாலையை டில்லி காவல்துறை கண்டுபிடிப்பு. விசாரணையின் போது, தொழிற்சாலை உரிமையாளர் கடந்த சில ஆண்டுகளில் 1,200 க்கும் மேற்பட்ட சட்டவிரோத துப்பாக்கிகளை விற்றதாக டில்லி காவல்துறை தெரிவித்துள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* நாட்டின் தேர்தல் செயல்முறை ஆபத்தில் உள்ளது: “வாக்காளர் பட்டியலின் முதல் வரைவு தயாரிக்கப்பட்டபோது, அப்போதைய தேர்தல் ஆணையம் அரசியல் அதிகாரம் காலனித்துவ ஆட்சியாளர்களிடமிருந்து மக்களுக்கு மாறிவிட்டது என்பதை பிரதிபலிக்கும் வகையில் உலகளாவிய வயதுவந்தோர் வாக்குரிமையை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. இது ஒரு உள்ளடக்கிய செயல்முறையாகும். இப்போது, குடிமக்களின் வாக்குரிமையை பறிப்பதற்கான காரணங்களைக் கண்டறியும் நோக்கத்துடன் SIR நடத்தப்படுகிறது, நீதிபதி சுதர்சன் விமர்சனம்.
தி டெலிகிராப்:
* என் தாயை அவமதித்து விட்டார்கள் என்ற பிரதமர் மோடியின் குற்றச்சாட்டுக்கு, சோனியா காந்தியை ‘ஜெர்சி பசு’ மற்றும் ‘காங்கிரஸின் வித்வா’ என்று அழைத்தது போன்ற அரசியல் எதிரிகளுக்கு எதிராக அவமதிக்கும் மொழியைப் பயன்படுத்திய வரலாற்றைக் கொண்டவர் என்று திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா பதிலடி.
– குடந்தை கருணா