திராவிட மாடல் அரசின் தொலைநோக்குப் பார்வை கோடைகால மின்வெட்டை தவிர்க்க வெளிச்சந்தையில் 7,040 மெகாவாட் மின்சாரம் வாங்க திட்டம்

2 Min Read

சென்னை, செப்.3- தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு கோடைக்காலத் தில் ஏற்படும் மின்சார தேவையை பூர்த்தி செய்ய வெளிச்சந்தையில் 7 ஆயி ரத்து 40 மெகாவாட் மின் சாரம் வாங்க, தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத் திற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனு மதி அளித்துள்ளது.

தமிழ்நாட்டின் மின்சார தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒவ்வொரு நாளுக்கு தருகிறது. ஒவ்வொரு கோடை காலத்தின் போதும் மின்சார தேவை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அடுத்த கோடை காலத்திற்குள் மின்சார தேவையை சமாளிக்கிற வகையில் முக்கிய முயற்சிகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாட்டின் அன்றாட மின்சாரத் தேவை சராசரியாக 16 ஆயிரம் மெகாவாட் என்ற அளவில் இருக்கும். கோடை காலங்களில் 20 ஆயிரம் மெகாவாட்டையும் கடந்து மின்சார தேவை அதிகரிக்கும். இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 20 ஆயிரம் மெகாவாட்டை கடந்தது. மே மாதத்தில் மின்சார தேவை அதிகரிக்கும் என கணக்கிடப்பட்ட நிலையில் மழையின் காரணமாக மின்சார தேவை அதிகரிக்கவில்லை. 2026-2027- ஆண்டில் தமிழ்நாட்டின் மின்சார தேவை 23 ஆயிரம் மெகாவாட்டாக அதிகரிக்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் அடுத்த ஆண்டு கோடை காலத்தில் மின்சார தேவையை சமாளிக்க வெளிச்சந்தையில் குறுகிய கால அடிப்படையில் மின்சாரத்தை வாங்க தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் திட்டமிட்டுள்ளது. இதன்படி, தடையில்லாமல் மின்சார வினியோகம் செய்வதற்காக, வருகிற 2026-ம் ஆண்டு பிப்ரவரி 1ஆம் தேதியிலிருந்து மே மாதம் 15ஆம் தேதி வரை 7 ஆயிரத்து 40 மெகாவாட் மின்சாரம் வாங்க குறுகிய ஒப்பந்தப்புள்ளி கோருவதற்காக, மின்சார ஒழுங்கு முறை ஆணையத்திடம் தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகம் அனுமதி கோரியிருந்தது.

அதன்படி, அடுத்த ஆண்டு கோடை காலத்தில் ‘பீக்ஹவர்’ எனப்படும், உச்ச நேர மின்சார தேவையை ஈடுகட்ட வெளிசந்தையில் குறுகிய கால அடிப்படையில் மின்சாரம் வாங்க தமிழ்நாடு மின்சார பகிர்மான கழகத்திற்கு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இதன்படி., அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 720 மெகாவாட், மார்ச் மாதம் 1,520, ஏப்ரல் மாதம் 2,400, மே மாதம் 2,400 மெகா வாட் கொள்முதல் செய்ய விரைவில் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட உள்ளது. இதில் நாள் முழுவதும் 4 ஆயிரத்து 400 மெகாவாட்டும். மாலை 6 மணியிலிருந்து நள்ளிரவு 12 மணி வரை 2 ஆயிரத்து 640 மெகாவாட்டும் மின்சாரம் பெறப்படுகிறது என்று மின்சார வாரிய அதிகாரிகள் கூறினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *