துணிவு – விருது
துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான ‘கல்பனா சாவ்லா’ விருதுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 30.6.2023 ஆகும். விண்ணப்பங்கள், பரிந்துரைகள் awrds.tn.gov.in. என்ற இணையத்தில் மட்டுமே பெறப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்து உள்ளது.
மழை
தென்மேற்கு பருவ மழை அடுத்த வாரம் கேரளாவில் தொடங்க உள்ள நிலையில் தமிழ்நாட்டில் படிப்படியாக வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கி யுள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழ்நாட்டில் 5 நாள்களுக்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மய்யம் தகவல்.
பொறியியல்
பொறியியல் இளங்கலை படிப்புகளில் சேருவதற் கான விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பிக்க இன்னும் 4 நாள்களே உள்ளது என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
வாக்காளர்கள்
தமிழ்நாட்டில் 2023ஆம் ஆண்டு மே 31ஆம் தேதி வரையிலான காலத்தில் வாக்காளர் பட்டியல் படி மொத்தம் 6,12,36,969 வாக்காளர்கள் உள்ளனர் என தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
பணிக்கு…
தமிழ்நாடு வக்பு வாரியத்தில், அரசுப் பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களிடமிருந்து ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட வாரியாக ஓராண்டு பணியாற்றிட விண்ணப்பங்கள் வர வேற்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
ஒப்புதல்
கூட்டுறவுத் துறையில் உலகிலேயே மிகப்பெரிய உணவு தானிய சேமிப்புத் திறனை உருவாக்க ரூ.1 லட்சம் கோடியில் புதிய திட்டத்திற்கு ஒன்றிய அமைச் சரவை ஒப்புதல் அளித்துள்ளது.