தேசிய அதிவேக ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட் (National High Speed Rail Corporation Limited – NHSRCL) ஆனது, பொறியியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கான 36 பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தப் பணியிடங்கள் ஒன்றிய அரசு வேலைகள் என்பதால், இந்தியா முழுவதும் உள்ள தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.
முக்கியப் பணியிடங்கள்
இந்தப் பணியிடங்கள் அசிஸ்டெண்ட் டெக்னிகல் மேனேஜர் மற்றும் ஜூனியர் டெக்னிகல் மேனேஜர் ஆகிய இரு நிலைகளில் உள்ளன. ஒவ்வொரு பணிக்கும் 18 காலியிடங்கள் உள்ளன.
- பணியின் பெயர்: அசிஸ்டெமண்ட் டெக்னிகல் மேனேஜர் (Assistant Technical Manager (S&T))
காலியிடங்கள்: 18
ஊதியம்: ரூ. 50,000 – 1,60,000/-
கல்வித் தகுதி: அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் Electronics/ Electronics & Communications/ Electrical/ Electrical & Electronics/ Computer Science/ Information Technology ஆகிய பாடப்பிரிவுகளில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணியின் பெயர்: ஜூனியர் டெக்னிகல் மேனேஜர் (Junior Technical Manager (S&T))
காலியிடங்கள்: 18
ஊதியம்: ரூ. 40,000 – 1,40,000/-
கல்வித் தகுதி: மேற்கண்ட பாடப்பிரிவுகளில் B.E./B.Tech பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு மற்றும் கட்டணம்
விண்ணப்பதாரர்கள் 21 முதல் 45 வயதுக்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி, குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வுகள் உண்டு.
- SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகள்
- OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகள்
- PWD (Gen/ WS) பிரிவினருக்கு 10 ஆண்டுகள்
- PWD (SC/ST) பிரிவினருக்கு 15 ஆண்டுகள்
- PWD (OBC) பிரிவினருக்கு 13 ஆண்டுகள்
விண்ணப்பக் கட்டணம் பெண்களுக்கு, SC/ST மற்றும் PWD பிரிவினருக்குக் கிடையாது. மற்றவர்கள் ரூ.400 செலுத்த வேண்டும்.
தேர்வு முறை மற்றும் முக்கியத் தேதிகள்
இந்தப் பணியிடங்களுக்கு எந்தவிதமான எழுத்துத் தேர்வும் கிடையாது. விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, ஆவணச் சரிபார்ப்பு, நேர்முகத் தேர்வு மற்றும் மருத்துவப் பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
- விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15.09.2025
தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் NHSRCL-இன் அதிகாரப்பூர்வ இணையதளமான www.nhsrcl.in மூலம் இணைய வழியில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன், அதிகாரப்பூர்வ அறிவிப்பை முழுமையாகப் படித்து அனைத்து தகுதிகளும் உங்களிடம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.