சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தொழிற்பயிற்சி

2 Min Read

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்

தமிழ்நாடு போக்குவரத்து துறையின் கீழ் சென்னை மாநாகர போக்குவரத்து கழகம் (MTC) செயல்படுகிறது. சென்னையில் அனைத்து வழியாகவும் இயங்கும் அரசுப் பேருந்து கட்டுப்பாடு, உபயோகம், பராமரிப்பு ஆகியவற்றை மாநகர போக்குவரத்து கழகம் மேற்கொண்டு வருகிறது. மின்சாரப் பேருந்துகள், ஏசி வசதி உடைய பேருந்துகள் உட்பட சென்னையில் இயங்குகிறது. இந்நிலையில், அய்டிஅய் தகுதி பெற்றவர்களுக்கு போக்குவரத்து கழகத்தில் தொழிற்பயிற்சி ஒவ்வொரு வருடமும் வழங்கப்படுகிறது.

தொழிற்பயிற்சி மூலம் இளைஞர்கள் பணிக்கான அனுபவத்தை நேரடியாக பெற முடியும். பணி காலத்தில் இளைஞர்களுக்கு உதவிடும் வகையில் மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட சில தொழிற்பிரிவுகளுக்கான தேவை உற்பத்தி, ஆட்டொமொபைல் தொழிற்சாலையில் அதிகளவில் உள்ளது. அந்த வகையில், தொழிற்பயிற்சி அவர்களுக்கான எதிர்கால வேலைவாய்ப்பிற்கு உதவும் வகையில் அமைகிறது.

தொழிற்பயிற்சி தகுதிகள் 2025

2025-2026ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த போக்குவரத்து துறை தொழிற்பயிற்சிக்கு அய்டிஅய் தகுதி பெற்றவர்கள் கலந்துகொள்ளலாம். மெக்கானிக் மோட்டார் வாகனம், மெக்கானிக் டீசல் வாகனம், எலெக்ட்ரீசியன், ஆட்டோ எலெக்ட்ரீசியன், ஃபிட்டர், டர்னர், பெயிண்டர் மற்றும் வெல்டர் ஆகிய தொழிற்பிரிவுகளில் அய்டிஅய் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

காலிப்பணியிடங்களின் விவரங்கள்

மெக்கானிக்கல் மோட்டார் வாகனம் – 373, மெக்கானிக் டீசல் – 40, எலெக்ட்ரீசியன்/ ஆட்டோ எலெக்ட்ரீசியன் – 33, வெல்டர் – 14, ஃபிட்டர் – 40, மொத்தம் – 500.

மாத உதவித்தொகை: எம்டிசி தொழிற்பயிற்சிக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.14,000 உதவித்தொகை வழங்கப்படும். தேர்வு செய்யப்படுபவர்கள் 1 ஆண்டு பயிற்சி பெறுவார்கள்.

சிறப்பு முகாம் ஏற்பாடு: மேல் குறிப்பிட்ட தொழிற்பிரிவுகளில் 500 பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பங்கள் நேரடியாக சிறப்பு முகாம் மூலம் பெறப்பட உள்ளது. மாநகர போக்குவரத்து கழகம் மூலம் குரோம்பேட்டையில் உள்ள பள்ளியில் செப்டம்பர் 10ஆம் தேதி முகாம் நடத்தப்படுகிறது. இதில் கலந்துகொண்டு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இடம்: மாநகர போக்குவரத்துக் கழக தொழிற்பயிற்சி பள்ளி, குரோம்பேட்டை

நாள் மற்றும் நேரம்: 10.09.2025 புதன்கிழமை காலை 10 மணி முதல்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *