கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 2.9.2025

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* ஒரு காலத்தில் சமத்துவத்தைப் பற்றி பேசிய நிதிஷ் குமார், இப்போது பாஜக – ஆர்எஸ்எஸ் உடன் இணைந்துள்ளார் என்று கார்கே சாடினார். நிச்சயம் சீக்கிரமே நிதிஷ் குமாரை ஆர்எஸ்எஸ்-பாஜக கைவிடும் என்றும் காங்கிரஸ் தலைவர் காட்டம்.

* மோடி தனது முகத்தை இனி காட்ட முடியாது; வாக்குத் திருட்டுக்கு எதிராக ஹைட்ரஜன் குண்டு வருகிறது: பீகார் பேரணியில் ராகுல் காந்தி ஆவேசம்.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* இந்தியா கூட்டணி குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளர் நீதியரசர் சுதர்சனுக்கு ஆம் ஆத்மி கட்சி ஆதரவு.

* பள்ளிகளில் 9ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை  நான்கு ஆண்டுகள் வரை மாநிலத்தில் படித்த மாணவர்களுக்கு மருத்துவப் படிப்பில் 85 சதவீத இட ஒதுக்கீடு அளித்திடும் தெலங்கானா அரசின் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் ஒப்புதல்.

* தெலங்கானா சட்டமன்றம் நிறைவேற்றிய பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் தர வலியுறுத்தி அனைத்துக் கட்சித் தலைவர்கள் ஆளுநரை சந்தித்தனர்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஒன்றிய அரசின் ஹிந்தி தலைப்பில் திட்டங்கள் பெயர்: மராத்தி மொழி பள்ளிகள் எதிர்ப்பு. அரசு நடத்தும் மற்றும் உதவி பெறும் பெரும்பாலான பள்ளிகள் மராத்தி மொழி பள்ளிகள் என்றும், எனவே மராத்தி மொழியில் தலைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தல்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* மாநில கல்விக் கொள்கை இல்லாததால், தமிழ்நாடு பல்கலைக்கழகங்கள் அமைதியாக தேசிய கல்விக் கொள்கையைப் பின்பற்றுகின்றன. தேசியக் கொள்கையின் பல அம்சங்களுக்கு ஆளும் திமுக கடும் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், தேசிய கல்விக் கொள்கையின் பல கூறுகள் படிப்படியாக மாநிலப் பல்கலைக்கழகங்களில் நுழைந்துள்ளன. மதுரை காமராஜ், பாரதியார், பாரதிதாசன் மற்றும் மனோன்மணியம் சுந்தரனார் போன்ற பல்கலைக்கழகங்கள் UGCயின் NEPஇன் படி, மனிதவள மேம்பாட்டு (HRD) மய்யங்களை மாளவியா மிஷன் ஆசிரியர் பயிற்சி மய்யம் என மறுபெயரிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தி இந்து:

* கல்வி உரிமைச் சட்டத்தின் (RTE) கீழ் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கான சேர்க்கைக்காக தனியார் பள்ளிகளுக்கு ரூ.3,000 கோடிக்கு மேல் திருப்பிச் செலுத்த வேண்டியுள்ளது என்று தமிழ்நாடு அரசு புகார் அளித்ததை அடுத்து, சமக்ர சிக்ஷா திட்டத்தின் கீழ் தனது பங்கை ஒன்றிய அரசு வழங்க மறுத்ததை அடுத்து, உச்ச நீதிமன்றம் தலையிட முடிவு. ஒன்றிய அரசுக்குப் பதில் அளிக்க நோட்டீஸ்.

தி டெலிகிராப்:

* ‘எனது பெயருக்கும் இசுலாத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை’: அடிப்படைவாதிகள் தன்னை எதிர்ப்பது தனக்கு ஒரு பாராட்டு என்று கவிஞர்-பாடலாசிரியர் ஜாவித் அக்தர் பேச்சு. ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 3 வரை நடைபெறும் ‘இந்தி சினிமாவில் உருது’ என்ற தலைப்பில் நடைபெறும் நிகழ்விற்கான அழைப்பை மேற்கு வங்க உருது அகாடமி திரும்பப் பெற்றதன் பின்னணியில் அவரது கருத்துகள் வந்துள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* பார்ப்பனர்கள் லாபத்திற்காக… ரஷ்யாவிடம் இந்தியா  கச்சா எண்ணெய் வாங்குகிறது.. டிரம்ப் ஆலோசகர் பகீர் அட்டாக்! பார்ப்பனர்கள் பற்றி பீட்டர் நவரோவின் கருத்துகளை காங்கிரஸ் தலைவர் உதித் ராஜ் ஆதரவு.

 – குடந்தை கருணா

 

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *