லால்குடி, செப். 2- லால்குடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 31.8.2025 காலை 11 மணி அளவில் லால்குடி பெரியார் திருமண மாளி கையில் நடைபெற்றது
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் இயக்க செயல்பாடுகள் குறித்தும் பெரியார் உலகம் நிதி திரட்டுதல் அவசியம், தந்தை பெரியார் பிறந்த நாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடுவது விடுதலை சந்தாக்களை புதுப்பித்து வழங்கும் செங்கல்பட்டு – மறை மலைநகரில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் குடும் பத்துடன் பங்கேற்பதின் அவசியத்தையும் ஆசிரியர் அவர்களின் அளப்பரிய உழைப்பால் கிடைத்திட்ட பலன்கள் குறித்தும் உரை யாற்றினார்
மாவட்ட கழக தலைவர் தே.வால்டேர் கூட்டத்திற்கு தலைமை யேற்று உரையாற்றினார்
மாவட்ட செயலாளர் அங்கமுத்து மாவட்ட காப்பாளர் ஆல்பர்ட் பொதுக்குழு உறுப்பினர் முத்துச்சாமி மாவட்ட துணைத் தலைவர் ஆசைத்தம்பி மாவட்ட துணைச் செயலாளர் சித்தாரத்தன் ஆகியோர் முன்னிலை ஏற்று உரை யாற்றினர்
லால்குடி ஒன்றிய இளைஞரணி தலைவர் சண்முகவேல், பகுத்தறி வாளர் கழக மாவட்ட தலைவர் முனைவர் வீ.அன்புராஜா, பகுத் தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் பாலசுப்பிரமணியன், பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் செல்வி, புள்ளம்பாடி ஒன்றிய தலைவர் திருநாவுக்கரசு, மாவட்ட மகளிர் அணி தலைவர் குழந்தை தெரசா, மாணவர் கழக தோழர் அவனிக்கோ இளந்தி ரையன், முருகேசன், ராஜா, தனபால், ராஜா சம்பத் மார்ட்டின் ஜான், பொற்செழியன், பிச்சைமணி ஆகியோர் கருத்துரை ஆற்றினர்
பாராட்டி சிறப்பு செய்தல்
லால்குடி மாவட்டத் தில் கழகப் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் மாவட்டத் தலைவர் வால்டர், அண்மையில் குடியரசு தின விழாவில் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவரால் சிறந்த அதிகாரிக்கான விருதினைப் பெற்ற மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் முனைவர் வீ.அன்புராஜா தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்று மண்ணச்சநல்லூர் அரசு மாதிரி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பொறுப்பேற்றிருக்கும் செல்வி ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்து கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் பயனாடை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
“உலகம் பெரியார் மயம் – பெரியார் உலகமயம் என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் நிதித் திரட்டி ரூ 10 லட்சம் வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப் பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.