செருப்பு (Footwear) என்ற ஆவணப்படம் கண்டேன். R.P. அமுதன் அவர்கள் தயாரித்து இயக்கிய தீண்டத்தகாததோர் என்று முத்திரை குத்தப்பட்டு கொடுமைகளைச் சந்திக்கும் அருந்ததியினர் வகுப்பைச் சார்ந்த மக்களின் வாழ்வியல் எப்படி நடக்கிறது என்பதை தத்ரூபமாக விளக்கும் உணர்வுப் பூர்வமான படம். திருச்சி மாவட்டம் தர்மநாதபுரம் பகுதியைச் சேர்ந்த அருந்ததி மக்கள் அன்றாட வாழ்வில் நிகழ்ந்து வரும் சவால்கள், நாம் அணியும் செருப்புகளைத் தயாரிக்கும் சுய தொழிலைச் செய்து வருவதில் அந்த இன மக்கள் அனுபவிக்கும் தொடர் துயரங்கள் பற்றிய காட்சிகள் படம் முழுவதும் பேசுகிறது. தர்ம நாதபுரம் பிள்ளைகளா?? அவர்களுடைய படிப்பு அவ்வளவுதாம்பா என்ற மட்டம் தட்டும் ஆசிரியர்களும் பள்ளிக்கூடங்களும் நிறைந்த சூழ்நிலைகளில் அந்த இன மக்கள் உழைத்துக் களைத்து எதிர்காலத்தை மறுநாள் நம்பிக்கையுடன் எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதை Periyar Vision OTT இல் கண்டு தெளிந்தேன்.
– ஜெ. காசிநாதன்
பெரியபாளையம்
– ஜி.பி. வாணன்
திருவொற்றியூர், சென்னை – 19
Periyar Vision OTT-இல் காணொலிகளைப் பார்த்து விமர்சனம் எழுதி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள். உங்கள் விமர்சனங்கள் ‘விடுதலை’ நாளிதழிலும், Periyar Vision OTT-இன் சமூக வலைதளப் பக் கங்களிலும் வெளியிடப் படும்.
சமூகநீதிக்கான உலகின் முதல் OTT எனும் பெருமைக்குரிய ‘Periyar Vision OTT’-இல் சந்தா செலுத்தி பகுத்தறிவுச் சிந்தனையூட்டும் அனைத்துக் காணொலிகளையும் விளம்பரமின்றிப் பார்த்து மகிழுங்கள்!
உங்களுக்கான சிறப்புச் சலுகைகளை தெரிந்து கொள்ள periyarvision.com/subscription பக்கத்திற்குச் செல்லுங்கள்! இணைப்பு : periyarvision.com