ரூ.65 கோடியில் ஓட்டேரி நல்லா கால்வாய் தூர்வாரும் பணி துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

2 Min Read

சென்னை, செப்.1- ரூ.65 கோடியில் ஓட்டேரி நல்லா கால்வாய் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

இது குறித்து வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப் பட்டு இருப்பதாவது:

ஆய்வுப் பணி

முதலமைச்சர் வடகிழக்குப் பருவமழையின் போது அதிக மழை பொழிவு ஏற்பட் டாலும், சென்னையில் நீர் தேங்காமல் இருப்பதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையில் பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் நீர்வளத்துறை ஆகியவற்றின் கட்டுப்பாட்டில் உள்ள கால்வாய்களில் ஆழப்படுத்துதல், அகலப்படுத்துதல். கான்கிரீட் சுவருடன் கூடிய மூடுகால்வாய்களை அமைத்தல், மழைநீர் கால்வாய்கள் அமைத்தல், கால்வாய்கள் கடலுடன் சேரும் பகுதிகளில் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள உயர் அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டங்கள் மற்றும் களஆய்வுப் பணிகளை தொடர்ச்சியாக மேற் கொண்டு வருகின்றார்.

இதன் காரணமாக கடந்த ஆண்டுகளில் எதிர்பாராத வகையில் சென்னையில் அதிக அளவு மழைபெய்தபோதும், சில மணி நேரங்களிலேயே வெள்ளநீர் வடிந்து உடனடியாக போக்குவரத்து இயல்பு நிலைக்கு திரும்பியதால் பல்வேறு தரப்பினரிடமிருந்து பாராட்டைப் பெற்றது. தற்பொழுது பிற மாநிலங்களில் மேகவெடிப்பு உள்ளிட்ட பெருமழைப் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறிப்பாக சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை வெள்ள முன்னேற்பாட்டுப் பணிகள் முன்னுரிமை அடிப் படையில் முதலமைச்சர் அறிவுறுத் தலுக்கிணங்க தொடர்ந்து மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.

தூர்வாரும் பணி

அந்த வகையில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட திரு.வி.க. நகர் மண்டலம், ஓட்டேரி நல்லா கால்வாயில் 65 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாருதல், தடுப்புச்சுவரினை உயர்த்திக் கட்டுதல், சங்கிலி வேலி அமைத்தல் உள்ளிட்ட பணிகளை 30.8.2025 அன்று தொடங்கி வைத்துப் பார்வையிட்டார். தொடர்ந்து, திரு.வி.க. நகர் மண்டலம், இரயில்வே ஆன்ஸ்லி கால்வாயில் 3.27 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், தண்டையார் பேட்டை மண்டலத்தில் வியாசர் பாடி, கேப்டன் காட்டன் கால்வாயில் 6.85 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், கொடுங்கையூர் கால்வாயில் 3.75 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் என மொத்தம் 78.87 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாருதல், பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் மிதக்கும் பொருட்களை அகற்றும் பணிகளைத் தொடங்கி வைத்துப் பார்வையிட்டார்.

மேலும், நீர்வளத்துறையின் மூலம் 28 கோடி ரூபாய் மதிப்பீட்டில் எண்ணூர் சிற்றோடை பாலம், கொசஸ்தலை ஆற்றில் சாம்பலை அகற்றுதல் மற்றும் தூர்வாரும் பணி, எண்ணூர் சுரங்கப்பாதை பக்கிங்காம் கால்வாயில் 4.50 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் தூர்வாரும் பணி, மதுரவாயல் பாலம், புழல் உபரிநீர் கால்வாயில் 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தூர்வாரும் பணி என மொத்தம் 32.90 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான தூர்வாரும் பணிகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.இந்த ஆய்வுகளின் போது, சீரமைப்புப் பணிகளை வடகிழக்குப் பருவமழைக்கு முன்னதாக முடிவடையும் வகையில் விரைவாகவும், தரமாகவும் மேற்கொள்ள வேண்டும் எனவும், பணிகளை தொடர்புடைய உயர் அலுவலர்கள் தொடர் ஆய்வு மேற்கொண்டு குறிப்பிட்ட காலத்தில் முடிவடைவதை உறுதி செய்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்நாடு துணை முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த விடுதலை வாசகர்களே, சகோதர, சகோதரிகளே, பெரியார் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேட்டாக திகழ்ந்து வரும் "விடுதலை" நம்முடையது.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம், ஒரு கருவி. இந்த விடுதலைப் பணியைத் தொடர, ஒலிக்க வைக்க, உங்கள் பொருளாதார பங்களிப்பு அத்தியாவசியமானது. பெரியார் விதைத்த பகுத்தறிவின் விதையை, நீங்கள் உரமிட்டு வளர்க்க வேண்டுகிறோம். உங்கள் நன்கொடையை அனுப்பவும். விடுதலைக்கு உரமிடுங்கள்!

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. ஒவ்வொரு ரூபாயும் பகுத்தறிவின் சுடரை ஒளிர வைக்கும்.

பெரியார் வாழ்க! விடுதலை வளர்க!


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *