செல்டோர்ஃப், செப்.1- தமிழ் நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க m;aரோப்பிய நாடுகளுக்கானப் பயணத்தை மேற்கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஜெர்மனி சென்றடைந்தார்.
நேற்று முன்தினம் (30.08.2025) இரவு பெருமழை கொட்டித் தீர்த்தது.
இச் செய்தியறிந்ததும் முதலமைச் சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தொலைபேசியில் சென்னையில் உள்ள அதி-காரிகளை தொடர்பு கொண்டு சென்னை மாநகரில் பெய்த மழையால் பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணியாற்றிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். இது பற்றிய விவரம் வருமாறு:–
சென்னை மாநகரம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் 30.08.2025 அன்று பெய்த மழை அளவு குறித்தும் அதனால் சாலைப்போக்குவரத்து, மழை நீர் வடிகால்மற்றும்தாழ்வான பகுதிகளில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்தும் முதலமைச்சர் அவர்கள் தொலை பேசியில் கேட்டறிந்தார்.
மாநகரில் பெய்த கனமழையால் பெரிய அளவில் எவ்வித பாதிப்புகள் இல்லையெனவும் சுரங்-கப்பாதைகள் உள்ளிட்ட எல்லாப் பகுதிகளிலும் சாலைப்போக்குவரத்து சீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது.
எனினும், எத்தகைய மழைச் சூழலையும் எதிர்கொள்ள கூடிய அளவில் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் பெரு மழை காரணமாக பொது மக்களுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் பணி-யாற்றிடவும் முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.