டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*பீகாரில் இன்றுடன் முடிவு பெறும் வாக்காளர் அதிகாரப் பயணத்தில் ராகுல், தேஜஸ்வி மற்றும் கூட்டணி கட்சித் தலைவர்கள் பாட்னாவில் நடைபயணம் மேற்கொள்கிறார்கள்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 50 சதவீத இட ஒதுக்கீடு உச்ச வரம்பை நீக்கி தெலங்கானா சட்டமன்றம் மசோதா நிறைவேற்றம். ஆளுநரை சந்தித்து விளக்கம் அளிக்கவும் முடிவு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*பீகாரில் மீண்டும் வாக்காளர் திருத்தம் நடத்த வேண்டும் என்று காங்கிரஸ் கோருகிறது; தேர்தல் ஆணையத்திடம் அளித்த 89 லட்சம் புகார்கள் நிராகரிக்கப்பட்டதாக கூறுகிறது. இந்த முறைகேடுகள் தேர்தல் ஆணையத்தின் நோக்கத்தைச் சந்தேகிக்க வைக்கின்றன என்று காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கேரா குற்றச்சாட்டு.
* தமிழ்நாட்டின் சமக்ர சிக்ஷா நிதிப் பங்கைக் கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சசிகாந்த் செந்தில் தொடர்ந்து உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். ஒன்றிய அரசின் முடிவு தமிழ்நாட்டில் 43 லட்சம் மாணவர்கள் மற்றும் 2.2 லட்சம் ஆசிரியர்களின் எதிர்காலத்தை பெரும் நிச்சயமற்ற நிலையில் ஆழ்த்தியுள்ளது என்று அவர் கூறினார்
தி இந்து:
* கேரள மாநில பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தின் (KSCBC) பரிந்துரை ஏற்றுக்கொள்ளப்பட்டால், மாநில பிற்படுத்தப்பட்டோர் வகுப்பை சேர்ந்த 28 ஜாதிகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு, மெட்ரிக் பள்ளிக்கு பிந்தைய மட்டத்தில் உதவித்தொகை மற்றும் சேர்க்கையில் இட ஒதுக்கீடு உள்ளிட்ட கல்விச் சலுகைகள் கிடைக்கும்.
தி டெலிகிராப்:
* பாட்னாவில் நடைபெறும் ராகுல் காந்தியின் ‘வாக்காளர் அதிகாரப் பயண’த்தில் ஜார்கண்ட் மாநில முதலமைச்சர் ஹேமந்த் சோரன் கலந்து கொள்கிறார்.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* “‘புதிய இயல்பு’ என்பது சீன ஆக்கிரமிப்பு மற்றும் நமது அரசாங்கத்தின் கோழைத்தனத்தால் வரையறுக்கப்பட வேண்டுமா?” என்று காங்கிரஸ் கட்சி கேள்வி
– குடந்தை கருணா