பப்பாளி தரும் நன்மைகள்

கொழுப்பைக் குறைக்கிறது: பப்பாளியில் நார்ச்சத்து, விட்டமின் C மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்கள் நிறைய உள்ளன. அவை தமனிகளில் கொழுப்பை தடுக்கிறது. அதிகப்படியான கொழுப்பு தமனிகளில் உருவாவதை தடுக்கிறது. மாரடைப்பு ஏற்படும் அபாயத்தை தடுக்கிறது. இயற்கையாகவே கொழுப்பின் அளவை குறைக்கும் தன்மை பப்பாளி பழத்திற்கு உண்டு.

சர்க்கரை வியாதி: இன்று பலருக்கும் இருக்கும் நோய் என்றால் அது சர்க்கரை/நீரிழிவு தான். இந்த பிரச்சனையை கட்டுக்குள் வைப்பதில் பப்பாளி பழம் சிறப்பாக செயல்படுகிறது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைப்பதோடு, நம் உடல் சோர்வையும் குறைக்கிறது.

செரிமானத்தை மேம்படுத்துகிறது: செரிமானத்திற்கு மோசமான விளைவுகளை தரும் ஆயில் உணவுகள், மசாலா உணவுகளை சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது. சமீபகாலங்களில் எண்ணெயில் தயாரிக்கப்பட்ட ஜங்க் ஃபுட் அல்லது ரெஸ்டாரன்ட் உணவை சாப்பிடுவது அதிகமாகி வருகிறது. இதனால் செரிமான சிக்கல் ஏற்பட்டு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். பப்பாளி சாப்பிடுவது செரிமான சக்தியை மேம்படுத்துகிறது. ஏனெனில் இதில் நார்ச்சத்துடன் சேர்த்து பாப்பேன் எனப்படும் செரிமான நொதிகள் அதிகளவு காணப்படுகின்றன. இது நம் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.

மாதவிடாய்: பெண்களுக்கு மாதவிடாய் இயற்கையானது. இதனால் உண்டாகும் வலிகள், உடல் சோர்வு தவிர்க்க முடியாதது. ஒரு சில பெண்களுக்கு ரத்த போக்கு அதிகமாக இருக்கும். இந்த மாதவிடாய் நேரத்தின்போது உடலில் சிக்கல்கள் ஏற்பட்டால் அதற்கு பப்பாளி சிறந்த தீர்வை அளிக்கிறது. எனவே பெண்கள் பப்பாளி (Papaya) சாப்பிடுவது மிகவும் நல்லதாகும்.

கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது: பப்பாளி பழத்தில் விட்டமின் A, ஜீயாக்சாண்டின், சிப்டோக்சாண்டின் மற்றும் லுடீன் போன்ற ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. அவை கண்களில் உள்ள சளி சவ்வுகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. அவை சேதமடையாமல் தடுக்கின்றன. விட்டமின் A மாகுலர் சிதைவின் வளர்ச்சியை தடுக்கிறது.

சருமம் வயதாகுவதை தடுக்கிறது: நம் அனைவருக்குள்ளும் இளமையாக இருக்க ஆசை இருக்கும். அதற்கு தினமும் பப்பாளி சாப்பிடுவது உங்கள் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பப்பாளியில் வைட்டமின் C, வைட்டமின் E மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற ஆன்டி-ஆக்சிடன்கள் நிறைந்துள்ளன. இது உங்கள் சருமத்தை சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகளில் இருந்து காக்க உதவுகிறது. எனவே நீங்கள் இளமையாக இருக்கவும் உங்கள் சருமத்தை மிளிர வைக்கவும் பப்பாளியை தொடர்ந்து சாப்பிடுங்கள்.

எண்ணற்ற ஆரோக்கிய நலன்களை தன்னகத்தே கொண்டிருக்கும் ஏழைகளின் பங்காளியான இந்த பப்பாளி பல ஆரோக்கிய நலன்களை நமக்கு அள்ளி வழங்குகிறது.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *