ஜக்கார்த்தா, ஆக. 31– தலைநகர் ஜகார்த்தாவில் நடந்த ஆர்ப்பாட்டத்தின்போது காவல்துறை வாகனம் மோதியதில், 21 வயதான உணவு விநியோக ஓட்டுநர் அப்பான் குர்னியவான் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் ஏமாற்றமும் அளிப்பதாக இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கூறியுள்ளார்.
குர்னியவானின் மர ணம் வருத்தமளிப்பதாகத் தெரிவித்த அதிபர், அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்தார். மேலும், உயி ரிழந்தவரின் குடும்பத்தின் வாழ்வாதாரத்தை அர சாங்கம் உறுதிசெய்யும் என் றும் அவர் உறுதியளித்தார்.
இச்சம்பவம் குறித்து மக்கள் அமைதி காக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். முன்னதாக, அதிகாரிகள் இச்சம்பவத்திற்காக மன்னிப்புக் கோரியதுடன், வெளிப்படையான விசாரணை நடத்தப்படும் என்றும் உறுதி அளித்தனர்.
கூடுதல் ஊதியம், ஆட்குறைப்பு நடவடிக் கைகளுக்கு முற்றுப்புள்ளி, மற்றும் வலுவான ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வாரம் முழுவதும் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகின்றன. இந்த ஆர்ப்பாட்டத்தின் போதுதான் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.