தஞ்சாவூர், ஆக. 31- பகுத்தறி வாளர் கழக ஊடகத்துறையின் சார்பில், ஆகஸ்டு மாதம் 15, 16, 17 ஆகிய மூன்று நாட்களில் தஞ்சாவூர் ஞானம் நகரில் உள்ள, அறிவுச்சுடர் அலுவலக வளாகத்தில் ஊடகப் பயிற்சிப் பட்டறை நடைபெற்றது.
வே.விசமதி, தெ.சவுத்ரி, இ.இளங்கனி, இ.இளவரசன், கு.ரஞ்சித்குமார், சி.பூபதி, வி.ஏ.இனியா, இரா.கலையரசன், சி.ரமேஷ், அ.சம்சு நிஷா ஆகி யோர் பயிற்சியாளர்களாக கலந்து கொண்டனர். முனைவர் ந.எழிலரசன், மா.அழகிரிசாமி, உடுமலை வடிவேல், ஆ.பிரகாஷ், ஆர்.வி.தேவா, துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், காணொலி வாயிலாக தேரடி இந்திரகுமார், திருச்சி வினோத்குமார், பேராசிரியர் மு.அறிவுச்செல்வன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் வகுப்பு கள் எடுத்தனர்.
கள அனுபவங்கள்
முதல் நாளில் (15.08.2025) முனைவர் ந.எழிலரசன் பயிற்சிப் பட்டறையின் நோக்கத்தைப் பற்றி விளக்கினார். பகுத்தறிவாளர் கழக ஊடகப்பிரிவு மாநில தலைவர் மா.அழகிரிசாமி வலைக்காட்சி பற்றிய அறிமுக விளக்கத்தை அளித்தார். ஊடகவியலாளர் உடுமலை வடிவேல் ஊடகவியலாளர்களின் கள அனுபவங்கள் பற்றி விளக்கிப் பேசினார். திருச்சி ஆ.அசோக்குமார் கைபேசி (Android Phone) மூலமாக காட்சியை பதிவு செய்வது, படத்தொகுப்பு செய்வது, கைபேசி மூலமாகவே வலையொளி (You tube) இல் வெளியிடுவது பயிற்சியும் செய்முறை விளக்கம் அளித்தார். பயிற்சியாளர்களும் செய்து பழகினார்கள்.
காட்சிப் பதிவுகள் பயிற்சி
அன்று பிற்பகல் நிகழ்ச்சியில் ஆ. பிரகாஷ், ஒளிப்படங்கள் எடுப்பது பற்றி காட்சி விளக்கம் அளித்தார். மாலையில் மா. அழகிரிசாமி Youtube வலைக்காட்சியின் பல்வேறு அம்சங்களைப் பற்றி விளக்கினார்.
செயலாக்கும் வாய்ப்பு
இரண்டாம் நாள் (16.08.2025) காலை 9.15 மணி அளவில் துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், பொருண்மை மற்றும் எழுத்து என்ற தலைப்பில் பயிற்சி அளித்தார். காலை 10.45 மணி அளவில் ஊடகவியலாளர் இந்திரகுமார் தேரடி காணொலி மூலமாக, காணொளிகளின் பல வடிவங்கள் பற்றி விளக்கம் அளித்தார். ஆர்.வி.தேவா Photoshop இல் காட்சி மற்றும் செய்முறை விளக்கம் அளித்தார்.
மென்பொருளில் பயிற்சி
பிற்பகல் உணவு இடை வேளைக்குப் பிறகு கேன்வா பயன்பாடு பற்றி பேராசிரியர் மு.அறிவுச்செல்வன் காட்சி விளக்கம் அளித்தார். மாலை 5 மணிக்கு படத்தொகுப்பு (Adobe Premiere Pro) மென்பொருள் மூலமாக காணொலி படத் தொகுப்பு (Editing) செய்வது எப்படி என்று ஆர்.வி.தேவா செயல்முறை விளக்கம் அளித்தார்.
வலைக்காட்சி
தொடக்க பயிற்சி
மூன்றாம் நாள் (17.08.2025) கழக துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னாரெசு பெரியார், மா. அழகிரிசாமி ஆகியோர் பயிற்சியாளர்களுக்கு வலைக்காட்சிகளைத் தொடங்க பயிற்சி அளித்தனர். வகுப்பு நிறைவு பெற்றதும், முதல் நாள் எடுத்த காணொலிகளை பயிற்சி யாளர்களே படத்தொகுப்பு செய்து, தாங்கள் உருவாக்கிய வலைக்காட்சிகளில் பதிவேற்றம் செய்து வெளியிட்டார்கள்.
செயற்கை நுண்ணறிவு
காலை 11:00 மணிக்கு Photoshop துறையில் ஏற்கனவே கற்றுக்கொண்டதை அடுத்து கூடுதல் பயிற்சியளிப்பதற்காக அனுபவமிக்க ஆசிரியர் திருச்சி வினோத்குமார் வருகை தந்து விரிவான பயிற்சிகளை வழங் கினார். செயற்கை நுண்ணறிவு மற்றும் உண்மை சரிபார்த்தல் ஆகிய தலைப்புகளில் அதன் முக்கியத்துவம் குறித்து மாணவர் களுக்கு ச.பிரின்சு என்னாரெசு பெரியார் பாடம் நடத்தினார். மாலையில் முனைவர் ந.எழிலர சன் மூன்றுநாள் பயிற்சியின் சிறப்புகளை பற்றி தொகுத்துப் பேசி மாணவர்களை வாழ்த் தினார். பயிற்சியின் நிறைவாக பயிற்சி பெற்றவர்கள் ஒவ்வொரு வரும் தங்களது கருத்துகளை தெரிவித்தார்கள்.
பயிற்சி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இந்நிகழ்வுக்கு தஞ்சாவூர் மாநகர கழக செயலாளர் வீரக்குமார் தலைமை தாங்கினார். பகுத்தறி வாளர் ந.காமராசு, தஞ்சாவூர் மாநகர விடுதலை வாசகர் வட்டச் செயலாளர் ஏ.வி.என். குணசேகரன் ஆகியோர் முன் னிலை வகித்தனர்.
மூன்றும் நாட்களும் பயிற்சியாளர்கள் குறைந்த கட்டணத்தில் உண்டு உறங்கி பயிலும் வசதியை மா.அழ கிரிசாமி ஊடகத்துறை பயிற்சிப் பட்டறையை சிறப்பாக ஏற்பாடு செய்தார்.