நாகப்பட்டினம், ஆக. 31- நாகப்பட்டினம் மாவட்டம் ஒக்கூர் பெரியார் திடலில் திராவிடர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.8.2025 அன்று மாலை 5.30 மணிக்கு மாவட்ட தலைவர் வி.எஸ்.டி ஏ.நெப்போலியன், தலைமையில் நடைபெற்றது.
நாகை நகர தலைவர் தெ. செந்தில்குமார், அனைவரையும் வரவேற்றார்
மாவட்ட செயலாளர் ஜெ. பூபேஸ்குப்தா, மாவட்டத் துணைத் தலைவர் பொன்.செல்வராசு, பகுத்தறிவாளர் கழக மாநில துணைச் செயலாளர் இரா.முத்துகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் கி.சுர்ஜித், ஆகியோர் முன்னிலை வகித்தனர்
கூட்டத்தில் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்
விடுதலை சந்தா சேர்த்தல். உலகம் பெரியார் மயம். பெரியாரே உலகமயம். என்கின்ற அளவிற்கு பெரியார் உலகத்திற்கு நாகை மாவட்ட சார்பாக அதிக அளவில் நிதி திரட்டி தர வேண்டும்.
உலகத் தலைவர் செப்டம்பர் 17 தந்தை பெரியார் 147ஆவது பிறந்த நாளை உற்சாகமாக இல்லங்கள் தோறும் தெரு. ஊர். ஒன்றியம்.நகரம். என எங்கு பார்த்தாலும் பெரிய அளவில் பெரியார் படம் வைத்து கழக இலட்சிய கொடி ஏற்றி கொண்டாட வேண்டும். அக்டோபர் 04 சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநில மாநாட்டிற்கு குடும்பம் குடும்பமாக கலந்து கொள்ள வேண்டும். மாநாட்டை விளக்கி சுவரெழுத்து விளம்பரம் செய்திடவும் அன்பான வேண்டுகோள் விடுத்து பேசினார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக. பொன்முடி, கடவுள் மறுப்பு கூறியும். நிகழ்வினை தொகுத்து வழங்கி. கருத்துகளை தெரிவித்தார்.
மாநில விவசாய தொழிலாளர் அணி செயலாளர் வீ.மோகன். உரையாற்றினார்
நிகழ்வில் பொதுக்குழு உறுப்பினர் நா.கமலம், மாநில மாணவர் கழகத் துணை செயலாளர் மு. இளமாறன், திருமருகல் ஒன்றிய தலைவர் இராச. முருகையன், கீழ்வேளூர் ஒன்றிய தலைவர் பாவா. ஜெயக்குமார், திருவாரூர் ஒன்றிய தலைவர் கவுதமன், திருமருகல் ஒன்றிய செயலாளர் சு.இராஜ்மோகன், கீழ்வேளூர் ஒன்றிய செயலாளர் ரா.பாக்கியராஜ், வேதை ஒன்றிய செயலாளர் மு.அய்ய்யப்பன், கீழ்வேளூர் நகர செயலாளர் ம.முத்துராஜா, மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பா.காமராஜ், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி செயலாளர் இரா. இராமலிங்கம், மாவட்ட இளைஞரணி தலைவர் வி. ஆர்.அறிவுமணி, மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மு.குட்டிமணி, மாவட்ட இளைஞரணி செயலாளர் கு.கமலநாதன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் இரா. பேபி, மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் செ.பாக்யராஜ், முன்னாள் மாவட்ட இணை செயலாளர் ரெ.துரைசாமி, ஒன்றிய துணைத் தலைவர் அ.அரங்கராசு, கீழ்வேளூர் வட்டார விவசாய அணி தலைவர் ஒக்கூர்.ராஜேந்திரன், திருமருகல் ஒன்றிய துணை செயலாளர் இரா. ரமேஷ், வேதாரண்யம் நகர தலைவர் ச.சக்திவேல், வேதாரண்யம் நகர செயலாளர் த.தமிழரசன், கோகூர் குஞ்சப்பன், கொட்டாரக்குடி எம். கலியபெருமாள், நாக. இரவிச்சந்திரன்,
நாகை ஒன்றிய செயலாளர் எம்.கே.சின்னதுரை நன்றி கூறினார்
முதுபெரும் பெரியார் பெருந் தொண்டர் ஒக்கூர் முத்துசாமி மீண்டும் தன்னை இயக்கத்தில் இணைத்துக் கொண்டார். மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார்.
விடுதலை சந்தா தொகை ரூ 25 ஆயிரம் வழங்கல்
நாகை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் முதல் தவணை யாக விடுதலை சந்தாவிற்கான தொகை ரூ 25 ஆயிரம் மாவட்ட கழக பொறுப்பாளர்கள் வழங்கி மகிழ்ந்தனர்
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
ஒக்கூர் மோகன், ஜெயபால், சித்தார்த்தன், இராஜுவ், பார்வதி அம்மையார், திருச் செங்கட்டாங்குடி திராவிட மாணவர் கழக பொறுப்பாளர் குருநாதன் தந்தை ஆதிநாதன், இராயத்தமங்கலம் தமிழரசன் ஆகியோர் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தை யும் தெரிவிக்கிறது.
மாவட்டத்தில் முடிவுற்ற விடுதலை சந்தாக்களை புதுப் பித்தும், புதிய சந்தாக்களை சேர்க் கும் பணியில் கழக தோழர்கள் அனைவரும் இணைந்து பணியாற்றுவது என முடிவு செய்யப்படுகிறது.
“உலகம் பெரியார்மயம் – பெரியார் உலகமயம்” என்ற உயர்ந்த நோக்கத்தோடு திருச்சி சிறுகனூரில் 100 கோடியில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் வேண்டுகோளை ஏற்று மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் 10 இலட்சம் நிதித் திரட்டி வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
2025 அக்டோபர் 4 அன்று செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் தமிழ்நாடு முதலமைச்சர் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கும் சுயமரியாதை இயக்கம் நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் தனிப் பேருந்தில் அதிகமான கழகத் தோழர்கள் அனைவரும் குடும்பத்துடன் பங்கேற்று சிறப்பிப்பது என முடிவு செய்யப்படுகிறது.