சென்னை, ஆக. 31- மூளையை தின்னும் அமீபா வைரஸ் பாதிப்பு தமிழ்நாட்டில் இல்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
சென்னையில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப் பிரமணியன் செய்தியாளர் களிடம் கூறியதாவது:-
கேரளாவில், மூளையை தின்னும் அமீபா நோயால் 18 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அசுத்தமான குளம் – குட்டைகளில் குளிப்பதால் இந்த நோய் பாதிப்பு ஏற்படுவதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
சேரும் சகதியுமான நீர்நிலைகளில் குளிக்கும் போது, இந்த ‘அமீபியா’ மூக்கின் வழியாக சென்று மூளையை பாதித்து மூளை காய்ச்சலை ஏற்படுத்துகிறது.
இந்த நோய் 95 சதவீதம் வரை தொற்று நோய் கிடையாது. தமிழ் நாட்டிலும், மாசுபட்ட குளம் குட்டைகளில் குளிப்பதை பொது மக்கள் தவிர்க்க வேண்டும்.
நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாத நீச்சல் குளங்களையும் உடனடியாக தூய்மைப் படுத்த வேண்டும் முதல மைச்சர் முக.ஸ்டாலின், தெருநாய்க்கடி சம்பவங்கள் குறித்து விவாதிப்பதற்காக பல்வேறு துறைகளை ஒருங்கிணைத்து கூட்டம் ஒன்றை நடத்தினார்.
அதில் தெருநாய்கள் பராமரிப்பதற்காக குடில்கள் அமைக்கப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
மருந்துகள் இருப்பு வைப்பு
இதற்கு முன்பு வட்டார அரசு மருத்துவமனை, அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே நாய்க்கடி மற்றும் பாம்புக் கடிகளுக்கு மருந்துகள் வழங்கப்பட்டு வந்தது.
தி.மு.க. அரசு அமைந்த பிறகு தான் தமிழ் நாடு மருத்துவத்துறை வரலாற்றில் ஆரம்ப சுகாதார நிலையங்கள், நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களில் நாய்க்கடிக்கு ஏ.ஆர்.வி. மருந்துகள், பாம்புக்கடிக்கு ஏ.எஸ்.வி. மருந்துகள் இருப்பு வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.