அரியலூர், ஆக. 31– தமிழ்நாடு விளை யாட்டு மேம்பாட்டு ஆணையத்தினால் (2025-2026) ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப்போட்டிகள் (26/08/2025) முதல் (08/09/2025) வரை அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைப்பெற்று வருகிறது.
இதில் பள்ளி மாணவ /மாணவிகளுக்கு 12 வயது முதல் 19 வயது வரை வயது வரம்பு பிரிக்கப்பட்டது .இதில் (28/08/2025)அன்று நடைபெற்ற சிலம்பம் போட்டியில் ஜெயங்கொண்டம் பெரியார் மெட்ரிக் மாணவிகள் கலந்து கொண்டு மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர்.
தனித்திறன் போட்டியில் R.தர்ஷினி (60-70 Kg) எடைப்பிரிவில் முதலிடத்தையும் N.செல்வபிரியா (50-60 Kg) எடைப்பிரிவில் முதலிடத்தையும் பிடித்து வெற்றி பெற்றனர். மாணவிகளுக்கு முதல் பரிசாக மொத்தம் ரூபாய் 6,000 வங்கியின் மூலம் செலுத்தப்படும். போட்டியில் வென்ற இரு மாணவிகளும் மாநில அளவில் நடைபெறும் முதலமைச்சர் போட்டிக்கு விளையாட தகுதி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
போட்டியில் வென்ற வீராங்கனைகள் மற்றும் பயிற்றுவித்த சிலம்பம் ஆசிரியர் செல்வம், உடற்கல்வி ஆசிரியர்கள் ராஜேஷ் ரவிசங்கர் மற்றும் ரஞ்சனி ஆகியோரை பள்ளி தாளாளர், முதல்வர் ஆர்.கீதா, இருபால் ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் உட்பட பலர் வாழ்த்தினர்.