செங்கல்பட்டு, ஜூன் 3- 20.05.2023 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு செங்கல்பட்டு மாவட்ட கழக – கல்பாக்கம் வாயலூரில் மிசா கஜேந்திரன் படத்திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது.
கல்பாக்கம் நகர தலைவர் மா.விஜயகுமார் வரவேற்புரை யுடன் செங்கல்பட்டு மாவட்ட கழகத் தலைவர் செங்கை சுந்தரம் தலைமையில், பொதுக்குழு உறுப்பினர் சிறீபக்தவச்சலம் முன்னிலையில், நகர இளைஞரணி தலைவர் குகனின் தந்தையார் மிசா நா.கெஜி (எ) கஜேந்திரன் (வயது 65) படத்தை மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர்
பா.மணியம்மை திறந்து வைத்தார்.
மாவட்ட தலைவர் செங்கை சுந்தரம் வீரவணக்க முழக்கமிட, தோழர்கள் அனைவரும் சேர்ந்து முழக்க மிட்டனர். வி.சி.க. ஒன்றிய மாணவர் கழக அமைப்பாளர் வெற்றி வேந்தன் பெருவள்ளூர் க.செல்லப்பன், பகுத் தறிவாளர் கழகப் பொறுப்பாளர் பேரானந்தம், கோவிந்த சாமி, ராமு, வாயலூர் அம்பேத்கர், கழக நகர இளைஞரணி செயலாளர் அஜித் மற்றும் குகன் குடும்பத்தினர், நண்பர்கள் ஆகியோர் நினைவேந்தல் நிகழ்வுக்குப் பின்னர் மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக் குரைஞர் பா.மணியம்மை சிறப்புரை ஆற்றினார். நகர செயலாளர் சாமு நன்றியுரை கூறினார்.