டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஜெர்மனி, லண்டன் பயணம்: ‘‘ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் அறிவாசான் தந்தை பெரியார் உருவப்படம் திறக்கப்பட இருக்கிறது. அதை என்னுடைய கரங்களால் திறந்து வைக்க இருக்கிறேன் என்று எண்ணி பார்க்கும்போது இப்போதே மகிழ்ச்சிக் கடலில் மிதந்து கொண்டு இருக்கிறேன்” என சமூக வலைத்தளத்தில் பதிவு.
* “கூட்டாட்சியை வலுப்படுத்துவோம்”! மாநில முதலமைச்சர்கள், கட்சித் தலைவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கடிதம் “இந்திய நாட்டின் கூட்டாட்சி அடித்தளங்களை வலுப்படுத்துவதில், அனைத்து மாநிலங்களின் ஒட்டுமொத்த விருப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில் அதற்கான ஒரு ஆவ ணத்தை வடிவமைப்பதிலும் மாநில முதல்வர்களும், கட்சித் தலைவர்களும் தீவிரமாக பங்கேற்க வேண்டும் என வலியுறுத்தல்.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* 75 வயது பிரச்சினை‘ஒரு மாதம், ஒரு நபர், 2 முரண் பாடான பேச்சு’: மோகன் பகவத்தை விமர்சித்த காங்கிரஸ்
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘உங்கள் வாக்குகள் திருடப்பட அனுமதிப்பீர்களா? பீகார் சத்தமாக பதிலளித்துள்ளது’ மக்கள் அவர் தேர்தலில் எப்படி வெற்றி பெறுகிறார் என்பதை அறிந்தவுடன், அவரது வானொலி நிகழ்ச்சியைக் குறிப்பிட்டு, அவரே தங்கள் சொந்த மன் கி பாத் பாடலை அவருக்குச் சொல்லத் தொடங்குவார்கள் என ராகுல் பேச்சு.
* மதுரா மற்றும் காசி கோவில்களுக்கான இயக்கங் களில் ஆர்எஸ்எஸ் பங்கேற்காது என்றும் அதே நேரத்தில் சுவயம் சேவகர்களை (ஆர்எஸ்எஸ் உறுப் பினர்கள்) அது தடுக்காது என்றும் அதன் தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ள கருத்துக்கு சி.பி.எம். கண்டனம். ‘அரசியலமைப்பிற்கு விரோதமானது’ மற்றும் பிரிவினைவாதமானது என குற்றச்சாட்டு.
தி டெலிகிராப்:
* குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: எதிர்க்கட்சி வேட்பாளர் சுதர்சன் ரெட்டி அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடிதம் எழுதி, ‘தகுதியின் அடிப்படையில்’ ஆதரவு கோருகிறார் முன்னதாக, அவர் சிவசேனா (யுபிடி) தலைவர் உத்தவ் தாக்கரே மற்றும் என்சிபி (எஸ்பி) தலைவர் சரத் பவார் ஆகியோரை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட போது சந்தித்தார்.
– குடந்தை கருணா