எட்டு ஆண்டுகள் தலைமையேற்று – எளிதில் எவரும் எட்டாத உயரத்திற்கு உயர்ந்தி ருக்கின்ற நமது தி.மு.க. தலைவருக்கு, தாய்க் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இன்று (29.8.2025) காலை 11 மணியளவில், தொலைப்பேசிமூலம் வாழ்த்துக் கூறினார்.
அத்துடன், முதலமைச்சர் மேற்கொள்ளும் ஜெர்மனி, இங்கிலாந்து நாடுகள் சுற்றுப்பய ணத்தின்போது ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் அறிவாசான் தந்தை பெரியார் படத்திறப்பை நடத்தி வைத்திடுவதற்கும் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகளைக் கூறினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், கழகத் தலைவருக்கு நன்றி தெரிவித்தார்.