பெரியார் வழியில் வந்த இயக்கம் என்று அறியப்படும் அ.தி.மு.க. இப்போது கோல்வால்கர், வீர சாவர்க்கர் வழியில் வந்தவர்களால் வழிநடத்தப்படுவது கவலை அளிக்கிறது :
விழுப்புரம், ஆக.29 அ.தி.மு.க.வை ஆர்.எஸ்.எஸ். வழி நடத்து கிறது என்ற ஒன்றிய அமைச்சர் எல். முருகனின் கருத்து, அ.தி.மு.க. ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டிற்குள் சென்றுவிட்டதைக் காட்டு கிறது என்று விடுதலைச் சிறுத் தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் குற்றம் சாட்டினார். இது தமிழ்நாட் டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் அவர் எச்சரித்தார்.
திண்டிவனத்தில் செய்தியாளர் களைச் சந்தித்த அவர், பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்துப் பேசினார்.
“பெரியார் வழியில் வந்த திராவிட இயக்கம் என்று அறியப் படும் அ.தி.மு.க., இப்போது கோல்வால்கர், வீர சாவர்க்கர் வழியில் வந்தவர்களால் வழிநடத்தப்படலாம் என்று சொல்வது கவலை அளிக்கிறது. இது சரியா, தவறா என்பதற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தான் மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்” என்று திருமாவளவன் கூறினார்.
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல்
இந்தியா கூட்டணியின் சார்பில் குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிடும் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி சுதர்சன் ரெட்டிக்கு ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார். சுதர்சன் ரெட்டி மனித உரிமை ஆர்வலர் என்பதாலும், அரசமைப்புச் சட்டத்தைப் பாது காப்பதில் உறுதியாக இருப்பவர் என்பதாலும் அவருக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறினார்.
பா.ஜ.க. இந்தப் தேர்தலைத் திணிப்பதாகக் குற்றம் சாட்டிய திருமாவளவன், “ஏற்ெகனவே இருந்த குடியரசுத் துணைத் தலைவர் பதவி விலகக் கட்டாயப் படுத்தப்பட்டார். அவருடைய நிலை என்ன என்பது தெரியவில்லை. குடியரசு துணைத் தலைவருக்கே இப்படி ஒரு நெருக்கடி வருவது அதிர்ச்சி அளிக்கிறது” என்றார்.
பீகாரில் ராகுல் காந்தி மேற்கொண்ட பயணம் குறித்துப் பேசிய திருமாவளவன், “தேர்தல் ஆணையத்தைப் பயன்படுத்தி பா.ஜ.க. மற்றும் சங்பரிவார் அமைப்புகள் வாக்குத் திருட்டில் ஈடுபடுவதை ராகுல் காந்தி அம்பலப்படுத்தியுள்ளார். இதற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் சென்றதை வரவேற்கிறோம்” என்றார்.
தமிழ்நாட்டிலும் இதுபோன்ற முயற்சிகள் நடைபெற வாய்ப் புள்ளது என்று குறிப்பிட்ட அவர், “சிறப்பு தீவிர திருத்தம் என்ற பெயரில் தங்களுக்கு வாக் களிக்காதவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலி லிருந்து நீக்க முயற்சிப்பது ஜனநாயக படுகொலை. தமிழ்நாடு மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.