தமிழ்நாட்டில் 10-க்கும் அதிகமான ஊழியர்கள் பணியாற்றும் கடைகள், வணிக நிறுவனங்கள் 24 மணி நேரமும் இயங்கலாம் என்று தமிழ்நாடு அரசு அறிவித்தது. ஆனாலும், இரவு 11 மணிக்கு மேல் கடைகளை மூட வேண்டும் என்று காவல்துறையினர் அழுத்தம் கொடுக்கின்றனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், 24 மணி நேரமும் கடைகள் இயங்கலாம்; இதை காவல்துறை தடுக்கக் கூடாது என்று அனைத்து காவல் நிலையங்களுக்கும், காவல்துறை தலைமை இயக்குநர் தெரியப்படுத்த உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.